முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு பகிரங்க மடல்
கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசத்தின் அம்பாறை மாவட்டத்திலே அமைந்துள்ள சாய்ந்தமருது கிழக்கே கடலையும் மேற்கே வயல்வெளியையும் கொண்ட ஒரு வனப்பு மிக்க பிரதேசமாகும்.
17 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஏறக்குறைய 7000 குடும்பங்களையும் மொத்தமாக 17000 ற்கு மேற்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கியுள்ளது.
தனியான பிரதேச செயலகம், 09 பாடசாலைகள், மாவட்ட வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், தபால் நிலையம், 3 உப தபால் நிலையங்கள், நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள், முக்கியமான வங்கிகள் என்பனவற்றைக் கொண்டிருப்பதோடு பல அரச அலுவலகங்களும் காணப்படுகின்றன.
2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக மீட்சி பெறாவிடினும் பொருளாதாரரீதியிலும் கல்வியிலும் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது முன்னேறிய ஒரு பிரதேசமாகவே காணப்படுகின்றது.
என்றாலும் கடந்த சில காலங்களாக முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கைதான் சாய்ந்தமருதுக்கான தனியானதொரு பிரதேச சபை என்பது.
இக்கோரிக்கையானது முக்கியமாக தேர்தல் காலங்களில் பரவலாகப் பேசப்படுவதும் பின்னர் மறக்கப்பட்டு விடுகின்றதொரு விடயமாகவும் உள்ளது.
சனத்தொகையில் குறைவாகவும் ஏனைய பொருளாதார, கல்வி, வாழ்வாதார விடயங்களில் குறைந்த மட்டத்திலுமுள்ள பல பிரதேசங்களுக்கு தனியான பிரதேச சபை இருக்கின்ற போது, எமது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு பிரதேச சபை வழங்கப்பட முடியாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிய முடியவில்லை.
அண்மையில் கல்முனை மாநகர சபையில் ஏற்பட்ட ஒரு குழப்பமான நிலைமையின் போது ஒரு மாநகர சபை உறுப்பினரின் அறிக்கையிலே தற்போதய மாநகர முதல்வரைப் பதவி விலக்கும் போது சாய்ந்தமருதுப் பிரதேசத்தின் தனியான பிரதேச சபைக் கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்படலாம் எனவே தற்போதய முதல்வரையே பதவியில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துப்பட கூறினார். இது எதனை உணர்த்துகின்றது.
பாராளுமன்ற அரசியற் பலத்தைப் பெறக்கூடிய சக்தியிருந்தும் அதனைப் பெறாமல் கோட்டை விடுவதும் எமது பிரதேசத்துக்கு ஒரு பின்னடைவாகும்.
தற்போதய அரசியல்வாதிகளான மாகாண சபை உறுப்பினர், மாநகர முதல்வர், மாநகர சபை உறுப்பினர்களால் இதுவரைக்கும் எமது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன? இக்கோரிக்கையினால் தங்களின் அரசியற் பயணம் தடைப்பட்டு விடும் என்பதனாலா?
முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதெற்கென்று உருவான SLMC ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் சாய்ந்தமருதில் வைத்தே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்னணியில் சாய்ந்தமருதுக்கு தனியானதொரு பிரதேச சபையை ஏன் பெற முடியாது என்பதை SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடமும் இப்பிரதேசத்தின் ஏனைய அரசியல் வாதிகளிடமும் பகிரங்கமாக விடுக்கின்றேன்.
பெற்றுத்தர முடியாவிட்டால் அதற்கான காரணங்களைப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்துங்கள் அல்லது தனியான பிரதேச சபையைப் பெற்றுத்தாருங்கள் என்று இப்பிரதேச மக்களின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.
இவ்வண்ணம்
வைத்திய கலாநிதி என் ஆரிப்
சாய்ந்தமருது

rauff could say :
ReplyDeletebrother ariff, im so busy now regarding fake acting in North muslims & liking mahinda dady.
& oru thooora nokkaththukkaaaha naan innum ameikkalle. anyhow ill try to talk about this next election meeting. but plz wait we have politic tricks.
Thx.
Dear Dr. Aarif,
ReplyDelete17000 வாக்களர்களையும், அணைத்து வழங்களையும் கொண்டுள்ள இந்த ஊரை ஒரு தனிப்பிரதேசமாக ஆக்கினால், குறிப்பாக கல்முனைக்குடி அரசியல்வாதிகள் நிட்சயம் மடிந்து போவார்கள். அதுதான் இதன் அடிப்படை இரகசியம்.
ஆக, சாய்ந்தமருது மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மாநகர முதல்வர் மூலமாக அல்லது நேரடியாக அமைச்சர் அதாஉல்லாவுக்கு உடனடி மகஜரை கொடுத்து ஜனாதிபதி மூலம் உடன் அங்கீகாரம் பெறமுடியும், சாய்ந்தமருதை தனி பிரதேச சபையாக்க முடியும். இந்த முயற்சியில் உடனடியாக கழமிறங்குங்கள் நிட்சயம் வெற்றி கிடைக்கும். காங்கிரஸ் மூலமாகத்தான் இது நடக்க வேண்டும் என்று யாரகுதல் எதிர்பார்த்தால் அது நிட்சயம் நடக்காது. மாறாக இது ஒரு தேர்தல் பிரச்சார தலைப்பாக மாத்திரமே இருக்கும். தலைவர் அஷ்ரப் கூட சாய்ந்தமருது தனிப்பிரதேச கொரிகையை கோசமாக முன்வைத்தாரே அல்லாமல் அதனை பெற்றெடுக்க உரிய ஆவணை செய்ய வில்லை. அந்த தலைவர் நினைத்திருந்தால் 24 மணித்தியாலத்துக்குள் தனிப்பிரதேசமாக அமுல் படுத்தி இருக்கலாம். மாறாக அந்த மர்ஹூம் அவர்களும் அரசியல் தந்துரோபாய பிரச்சாரம்தான் செய்தார். இது அனைத்து மக்களுக்கும் தெரிந்த விடயம். ஆனால் வரட்டுக் கௌரவன் ஏற்க மாட்டார்கள்.
அதற்காக அதாஉல்லா நல்லவர் என்று சொல்ல வர வில்லை. இலகுவான சந்தர்பங்கள், வசதி வய்ய்ப்புக்கள் கையில் இருக்கும் போது அதனை நாம் தவற விட்டால் அதுதான் மிகப்பெரிய மடமையாக இருக்கும்.
தனிப்பிரதேச சபையாக ஆக்குவதற்கு அதாஉல்லா எந்நேரமும் தயாராக இருக்கின்றார். அந்த சந்தர்பத்தை ஏன் நாம் பயன்படுத்த ஒன்று படக்கூடாது?
வைத்தியர் சகோதரர் ஆரிப் அவர்களே..
ReplyDeleteசாய்ந்தமருது வாழ் மக்களின் நீண்ட கால தேவையான தனிப் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட சுயநலதிட்காகவே அன்றி வேறு எக்காரணம் கொண்டும் கிடைக்கபெறாமலில்லை. சாய்ந்தமருது என்ற ஒரு ஊர் மாத்திரமே அன்று தொட்டு இன்றுவரை முஸ்லிம் காங்கிரசுக்கு 90 சதவீதம் முழு ஆதரவை வழங்கிக்கொண்டு இருக்கும் ஒரே ஒரு பிரதேசமாகும். அவ்வாறு இருந்தபோதும் எந்த காலகட்டத்திலும் அக்கட்சியினால் அதிகம் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரதேசம் என்றால் அதுவும் சாய்ந்தமருதுதான். அவ்வாறேதான் தனிப் பிரதேச சபை என்ற இப்பிரதேச வாழ் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. தனியான பிரதேசம் அமைக்கபட்டால் கல்முனை மாநகர சபைக்குள் வரும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்கள் பாதிக்கப்படும், கல்முனை மாநகர சபை முஸ்லிம்களின் கைகளில் இருந்து பறிபோய்விடும், அவ்வாறு ஒரு வரலாற்று தவறை செய்ய தாம் துணை போககூடாது என்றல்லாம் பொய்யான தரவுகளையும் அச்சத்தினையும் ஊட்டி இக்கோரிக்கையை நிராகரித்தவர்களும் இவர்கள்தான், இன்றுவரை அதற்கு முட்டுக்கட்டை போட்டு நிற்பவர்களும் இவர்கள்தான். 68000 மொத்த வாக்காளர்களைகொண்ட கல்முனை மாநகர சபையில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50000 ஆகும். இதில் 18500 வாக்குளைகொண்ட சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை அமைவதால் ஏனைய பிரதேச முஸ்லிம் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வரப்போவதில்லை. எனவே, எமது மக்களின் எதிர்பார்ப்பும் நீண்டகால தேவையும் வெறும் வக்கற்ற அரசியல்வாதிகளின் சுயநலதினாலயே மழுங்கடிக்கபட்டுகொண்டு இருக்கிறது...
ஏன் இந்த ஊர் வாதமும் பிரதேசவாதமும்,மாநகர சபையில் ஏற்பட்ட கருத்து மோதலின் முடிவு .....பிரிந்து செல்வது தானா....அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது வைத்திய கலாநிதிக்கு தெரிய வாய்ப்பில்லை தான்,....1km சுற்றளவை கொண்ட சாய்ந்தமருதும் அதே அளவு சுற்றளவு கொண்ட கல்முனை,கல்முனைகுடியும் இணக்கப்பாட்டுடன் வாழமுடியாதென்பது வெட்கப்படவேண்டிய விடயம் ....ஒற்றுமை தான் நமது பலம் என்பது படித்த மேதாவிகளும் உணராதவரை,குண்டான் சட்டி குதிரையோட்டம் நிற்க்காதவரை நமது சமூகத்திக்கு இழி நிலை தான்.
ReplyDeleteDear Dr. Arif, I am sorry to say that I am once again sick to read your article demanding for so called Ealaam in Sainthamaruthu. At this time and age, All our worries are to unite all Muslims under one umberalla in order to face new challenges falling upon our Ummah in particular, SL Muslim community nationally and globally. On the other hand, With such an old and narrow minded plot of establishing separate DS office in Sainthamarthu is not something new but you are justifying that Sainthamaruthu can not get along with geographically non-separated neighbouring Kalmunaikudy. What a Shame. It would make sense perharps if you demand the same DS office including both Kalmunaikudy & Sainthamaruthu. I am unable to comprehend and figure out your mentality of well absorbed 'Divide & Rule' imperialist menia by dividing lands & peoples over & again. If we, educated people are able to digest and encourage this type of demand, then, I don't find any wrong with BBS, JHU etc for their demands. Please Stop poisioning innocent public. I, myself had enough in early 90's when I was a student in Zahira National College by withnessing the extremist teachers team activily promoting Sainthamaruthu students and ignoring others. I am a victim of this conspiracy. For me, I don't see any difference in between Kalmunaikudy & Sainthamaruthu in terms of geography, religion, language, culture & Tradition. If Father is from Sainthamaruthu, then Mother is from Kalmunaikudy. you can not separate both unless you have a great sickness in your heart but to fill your pocket.
ReplyDeleteதயவு செய்து சகோதரர் ராஹிம் அவர்கள் சொன்னதைப் போல் பிரதேசவாதம், ஊர்வாதம் அனைத்தையும் கலைந்து விட்டு ஒன்றுபடுங்கள்.
ReplyDelete"Think Globally, Act Locally"
ReplyDeleteBr Rahim, You do not understand the article. When there is a possibility to get it, why it cant? You read the article until you become clear. If you are telling about unity, why was this country divided into Provinces, Districts, Towns, Divisions, Villages, etc.? That is to make the administration easy and to reach the public as much as possible. Can you understand this?
ReplyDeleteI don't see any wrong with that article. Some of you are not understanding the fact behind this. Think about the resources and facilities which are distributed to the local bodies by the government. This is the matter may be from that article. It doesn't mean to separate people or land. Mr. Ismail and others try to think positively. Your experience in those days may be not correctly worked out. Because of it, now don't think negatively. Try to understand.
ReplyDeleteஅன்பின் வாசர்கள் மற்றும் ஆரிப் சேர் அவர்களுக்கும்,
ReplyDeleteநான் சம்மாந்துறையைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் சில நியாயமான கருத்துக்களை இயம்புகின்றேன்..
சாய்ந்தமருது ஊருக்கு தனிப்பிரதேச சபை வேண்டும் என்று ஆரிப் சேர் கேட்கிறார். அது அவருடைய உரிமை.
ஆனால் சாய்ந்தமருது ஊருக்கு தனிப்பிரதேச சபை வழங்க வேண்டுமா அல்லது வழங்கக்கூடாதா என்பதை நான் முன்வைக்கும் கருத்துக்களிலிருந்து நியாயங்களை தெரிவிக்க முடியும்.
கல்முனை மாநகர சபை தொடந்து முஸ்லிம்களின் கையில் உள்ள ஒரு மாநகர சபையாகும். இதனால், மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைக்குடி, இஸ்லாமவாத், சாயந்தமருது போன்ற முஸ்லிம்கள் பகுதிக்குச் சொந்தமான ஒரு கூட்டு மாநகர சபையாகும்.
அவை தனிப்பட்ட ஊர்களுக்கு சொந்தமானதெல்ல, இதில் சாய்ந்தமருது கிராமத்தில் மேற்கூறிய கிராமத்தை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறார்கள்.
மேலும், சாய்ந்தமருது ஊருக்கு தனியொரு பிரதேச சபை வழங்கினால் முஸ்லிம்களுக்கு கிடைக்ககூடிய நகர சபையின் அதிகாரம் தமிழர்களுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புக்களே அதிகம், காரணம் என்னவெனில்
நமது முஸ்லிம் சகோதர்கள், யானையிலும், மரத்திலும், வெத்திலையிலும், சுயச்சையாகவும் தேர்தலில் குதிப்பது நம்பவர்களின் வழக்கமாகும். ஆனால் தமிழர்கள் அவர்கள் கூட்டனியைத் தவிர எந்தக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆகவே, நிச்சயம் நாங்கள் ஒரு மாநகர சபையை இழந்து ஒரு பிரதேச சபையை மூன்று கிராமங்களையும்
தமிழர்களால் ஆளப்பட வேண்டிய நிர்ப்பந்தம் அங்கு ஏற்படுத்துவது சரியா?
கல்முனையில் பல ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம் சகோரதர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கல்முனை மார்கெட் மற்றும் ஏனைய கடையகள் தொடர்பான ஆதிக்கம் அவர்களின் பக்கம் செல்லும் போது மூன்று ஊர்களைச் சேர்ந்த எமது சகோதர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.
சிலரின் குறுகிய அரசியல் இலாபங்களை மாத்திரமே சிந்திக்கின்றார்கள். தவிர கிழக்கு மாகாணத்தின் பாரிய பகுதிகளை இழக்க வேண்டிய சந்தர்ப்பங்களை நாங்களே தேடிக் கொடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமா?
கடந்த தற்கால அரசியல் வாரிசிகளின் வரலாறு பற்றிய நோக்கு
எம். சீ. அகமட் - சாய்ந்தமருது (திருமணம் முடித்தது கல்முனைக்குடியில்)
மையோன் முஸ்தபா - சாய்ந்தமருது(திருமணம் முடித்தது கல்முனைக்குடி)
எம்.எச்.எம். ஹரீஸ் - கல்முனைக்குடி (திருமணம் முடித்தது சாய்ந்தமருது)
ஜெமீல் (மாகாண சபை உறுப்பினர்) - சாய்ந்தமருது (திருமணம் முடித்தது கல்முனைக்குடி)
இவ்வாறான ஒரு பாரிய அரசியல் வரலாற்றைப் சற்றும் சிந்திக்காமல் வெறும் குறுகிய சிந்தனையில் கலாநிதி பட்டம் முடித்தவர்களும் சிந்தப்பதையிட்டு தான் இந்த விமர்சனத்தை எழுதுகின்றேன்.
குறிப்பு ( மூன்று முஸ்லிம் கிராமங்கள் பாதிக்கப்பட்டு உதிரியாகக் கிடைக்கூடிய அற்ப சிந்தனைக்காக இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமா? இல்லையா?
appo allorukkum pathawi aasathana.... vottu potta makkal muttalkal thana..... apponkayya mutippinka unka nadakaththa,,,, pawam ellaiyaya makkal,,,,, yaraiyya nampura eppo,,,,, makkal pirachchana kitakkuthaiyya kuppila,,,, allamme nan ponaththano thappooo...... ........eppadikku perum thalawar... ashraf.....
ReplyDelete