டுபாய் முதலீட்டு மாநாட்டில் அமைச்சர் றிசாத் (படங்கள்)
(மொஹமட் சப்ரி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார வர்த்தக அமைச்சர் அஷ் ஷேக் ஷேக் அல்மன்சூரி அவர்களின் அழைப்பினை ஏற்று துபாய் சென்ற இலங்கைக்கான வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 03 வது தடவையாக துபாயில் இடம்பெற்ற வருடாந்த முதலீட்டு மகாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டார் .
ஏப்ரல் 03 ம் திகதியில் இருந்து மே 02 ம் திகதி வரை இடம்பெற்ற இந்த மகாநாட்டினை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உப ஜனாதிபதியும் , பிரதம மந்திரியும் மற்றும் துபாய் இராச்சியத்தின் ஆட்ச்சியாளருமான அஷ் ஷேக் முகம்மட் பின் ரசீட் அல் மக்தூம் தொடங்கி வைத்தார் . 50 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் 25 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்குபற்றினர்.
மகாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் றிசாட் பதியுதீன் ஐக்கிய அரபு இராச்சியம் , மொரோக்கோ , பாக்கிஸ்தான் ,மொரிசியஸ் , கொசோவா , நாடுகளை சேர்ந்த வர்த்தக அமைச்சர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்தியதுடன் மகாநாட்டில் பங்குபற்றிய வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சந்தித்து அவர்களை இலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீட்டு நடவடிக்கைகளிலும் பங்கு பற்றுமாறு அழைப்பு விடுத்தார்.
துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதி தூதுவராலயத்தின் கொன்சல் ஜெனரல் அப்துல் றஹீம் இதற்க்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்ததுடன் அமைச்சருடன் மகாநாட்டிலும் பங்குபற்றினார்



Post a Comment