Header Ads



சவூதி அரேபியா, தமாமில் நிர்க்கதியான இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பெற்று சவுதி அரேபியா சென்றிருந்த இலங்கைப் பணியாளர்கள் 230 பேர், தமாமில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள தனியார் முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக சுத்திகரிப்பு பணியாளர்களாக,  இலங்கையர்கள் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர்.

நிர்க்கதிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைப் பணியாளர்கள் தமாமில் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே இணங்கியவாறு தமக்கான சம்பளம் மற்றும் வசதிகள் வழங்கப்படவில்லை எனவும் அவர்  குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் அனுர முத்துமாலவிடம் நியூஸ்பெஸட் வினவியது, இந்த பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உடனடி தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை இலங்கைப் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களின் உறவினர்களால் இதுவரை எவ்வித முறைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், முறைப்பாடு தெரிவிக்கப்படும் பட்சத்தில் அதுகுறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான  மங்கல ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.