மற்றுமொரு பௌத்த தேரர் தீக்குளிக்க முயற்சி - பாதுகாப்பு தரப்பினர் தடுத்து நிறுத்தினர்
(GTN)போகாவத்த இந்திரரத்ன தேரரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாளிகாகந்த சுதத்த தேரர் என்பவர் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கொல்லப்பட்ட தேரரின் உடல் தொடர்பான இறுதி கிரியைகளை மேற்கொள்ள சென்ற இராவணா சக்தி அமைப்பினர், மலர் சாலைக்கு சென்றிருந்தனர் அப்போது, சடலம் எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்ற செய்தி அறிந்த அவர்கள் ஆத்திரமடைந்து குழப்பத்தில் ஈடுபட்டனர்.
அவர்களில் இருந்த மாளிகாந்த சுதத்த தேரர் பெட்ரோல் போத்தல் ஒன்றை கொண்டு வந்து தன் மீது அதனை ஊற்றி தீ குளிக்க முயற்சித்துள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதேபோல் ஏற்கனவே தீக்குளித்துக்கொன்டவரையும் பல வகைகளில் தடுத்து இருக்க முடியும். ஒரு உயிர் தீயிட்டு கொளுத்தும் வரை காத்திருந்த வீடியோ கமராக்காரர்கள் என்ன சமூகதுரோக செயலுக்கு ஆதரவளித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் கீழ்த்தரமான் ஊடகத்தொழிலை செய்கின்றார்கள். குழங்தைகளுக்கும் இக்காட்சியை நேரே பார்க்ககூடிய வாறு கண்டியில் இச்சம்பவம் நடைபெற்றது கவலைதான். எவ்வாறான சமூகத்துக்கான அடிக்கல் இது
ReplyDeleteALLAH INTHA SAMUHATHILLA ERNTHU ENGALAI PAATHUKAAPPANAAHA. MEENDUM IYAMUL JAHILIYAWA?
ReplyDeleteஇனவாதத் தேரர்களுக்கு இப்போது 'நெருப்புக்' காய்ச்சல் சீசனோ..?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-