Header Ads



கோத்தபாயவின் முழுமையான அறிவுறுத்தளுடனே அமெரிக்கா சென்றோம் - பொதுபலசேனா



(Vi) புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே, தாம் உள்ளிட்ட பிக்குகள், வெளிநாடு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நோர்வே பிரஜை ஒருவரின்  அழைப்பின் பேரிலேயே இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும் புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமது அமைப்புக்கு பெரும் தேவை இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் முழுமையான அறிவுறுத்தல்களுடனேயே தமது அமைப்பின் பிக்குமார் அமெரிக்காவுக்கு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டுக்கு வெளியில் நாட்டை நேசிக்கும் தேசப்பற்றாளர்கள் இருப்பதாகவும் துரதிஷ்டவசமாக அவர்கள் இலங்கை சமூகத்திற்குள் இல்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 போரில் வெற்றியோ தோல்வியோ இல்லை என்பதால், தமிழ் சகோதரர்களுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் தேவை தமக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முதல் நாட்டில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும்  ஜெனிவாவுக்கு சென்றும் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அது ஜனநாயக உரிமை எனவும் தேரர் கூறியுள்ளார்.

8 comments:

  1. கோத்தபாய சொல்லச்சொல்லி சொன்னாராக்கும் அப்ப நீங்க போவதற்கு முன்பு அமெரிக்காவில் காரியாலயக்க கிழை திறக்கபோவதாகச் சொன்னது மறந்து போய்விட்டதோ. முன்னுக்குப் பின் முறணான பேச்சு, மூடத்தனமான பேச்சு, அனாகரிகமான பேச்சு மிச்சம் அசிங்கம்.

    அது சரி chicken, beef, mutton புரியாணி எப்படி ருசியா இருந்ததா? என்னதான் வெளியில பேசினாலும் ஆண்டவன் நமக்காகப்படைத்தவைகளை சாப்பிடாம இருக்கமுடியல்ல இல்ல.

    ReplyDelete
  2. aaha idu enna puddukkadyaha irukku

    ReplyDelete
  3. all anti muslim activities happens in srilanka lead by terrorist Mr. kotabaya

    ReplyDelete
  4. Arasangathin muslim ottunnihalukku ippodavadu purihirada bbs leader gothabe than endru. Ithaithan azad saleh thunindu koorinar valha Azad

    ReplyDelete
  5. WE SHOULD READ THIS NEWS ITEMS BETWEEN THE LINES. QUESTIONS, 1. WHY DID NORWAY SPEND FOR THIS TRIP? 2. WHY DID GOTA WANT TO SEND A RACIST CLIQUE TO USA? 3. NOW WHO WANTS TO DIVIDE SRI LANKA, IS IT TAMILS, MUSLIMS OR GOTA HIMSELF?

    ReplyDelete
  6. தமிழர்களுடன் பேசுவதற்கு நீ யார்? நீ நல்லவனா? நாட்டில் சமாதானத்துக்காக உழைத்தவனா? நீ பொய்யும் பித்தலாட்டமும் குடியும் குடித்தனமும் கொண்டவனில்லையா? ஆக மொத்ததில பாதுகாப்பு அமைச்சருக்கு ஆப்படிக்க எண்ணுகிறாய்? நீ இன்னும் மறணத்தை எண்ணிப்பார்க்கவில்லையா? கலகொட போதும் அடங்கி இரு. அனீதி அழிந்துவிடும் உண்மை ஒருபோதும் தோற்றுப்போகாது மகனே இதெல்லாம் உனக்குப்புரியாது. நீ மனிதாபிமானம் அற்றவன் குழப்பவாதி.

    ReplyDelete

Powered by Blogger.