தீக்குளித்து பிக்குவின் இறுதிக்கிரியை முடியும்வரை இறைச்சிக்கடைகளை மூட கோரிக்கை
மிருக வதையை எதிர்த்து தற்கொலை செய்துக்கொண்ட பௌத்த பிக்குவின் இறுதிக்கிரியைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவின்பேரில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
எனினும் இதனை கண்டித்துள்ள ராவண பலய என்ற பிக்கு அமைப்பினர், பௌத்த தர்மப்படி செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளில் இறந்தவர் ஒருவரின், இறுதிகிரியையை நடத்தமுடியாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது
இந்தநிலையில் தீக்குளித்து மரணமான பௌத்த பிக்குவின் இறுதிக்கிரியை முடியும் வரை நாட்டின் இறைச்சிக்கடைகளை மூடிவைக்குமாறு ராவணா பலய அமைப்பின் தேசிய அமைப்பாளர் புளியத்த சுதம்ம தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்

நாட்டையும், சமூகத்தையும், குடும்பத்தையும் பொருளாதார, சமூக ரீதியில் சீராழிக்கின்ற குடி, சூதாட்டம் ஆகியவற்றை விட்டுவிட்டு இந்த மாடு வெட்டுதல் போன்றவற்றிற்காக இந்த மதகுரு தீக்குளித்தது ஞாயமாகுமா? அதே பொளத்தம் தான் கூறுகிறது. மது அருந்தக்கூடாது என்று. ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து, பிள்ளைகள் சீரழிந்து சின்னாபின்னமான ஒரு வாழ்க்கையை குடிபோதையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் குடும்பத்தலைவர்களது குடும்பத்தின் நிலை. எப்போது இதற்கு தீக்குளிக்கப்போகிறீர்கள்? அல்லது குடிகுடிக்கப்போகிறீர்களா?
ReplyDeleteசெவ்வாயிலும், வெள்ளியிலும் இறந்தவர் ஒருவரின் ஈமைக் கிரியைகளை பௌத்த தர்மத்தின்படி நடாத்த முடியாது என அறிவுரை பகரும் இந்த இராவண பலய பௌத்த குருமார்கள், பௌத்த மதகுரு ஒருவர் தீக்குளித்ததை பௌத்த தர்மமாகக் கருதுகின்றார்களா?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
Hello MR & Co. Cant you erase this Bunch of Idits? who destroy our mother land for thier own vested survival?
ReplyDelete