காத்தான்குடியில் தஹஜ்ஜத் தொழுகைக்கு அதான்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசமான மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் பிரதான ஜும்மாப் பள்ளிவாயல்களில் முஹம்மத் (ஸல்)அவர்களின் வழிமுறைக்கேற்ப தஹஜ்ஜுத் பாங்கு (அதிகாலையில் அதான் சொல்லுதல்) சொல்வதை அமுல்படுத்துவதற்கான தீர்மாணத்தை காத்தான்குடிப் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் எடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த 14.04.2013ஆம் திகதிய சம்மேளன நிருவாக சபைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதன் பிரகாரம் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் 08.05.2013ஆம் திகதிய கடிதத்தின் படி இதற்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்மேளனத்தின் 12.05.2013ஆம் திகதிய நிருவாக சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள ஆறு பிரதான ஜும்ஆ பள்ளிவாயல்களான ஜாமிஉழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-முஹைதின் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-மஸ்ஜிதுல் மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி-01,பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-01,பெரிய ஜும்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-03,நூறாணியா ஜும்ஆ பள்ளிவாயல், புதிய காத்தான்குடி-06ஆகிய ஆறு ஜும்ஆ பள்ளிவாயல்களில் மாத்திரம் ஸுபஹ் தொழுகைக்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் தஹஜ்ஜுத் அதான் சொல்வதென்றும், ஏனைய பள்ளிவாயல்களில் ஸுபஹ் தொழுகைக்காக மாத்திரம் அதான் சொல்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்பிரகாரம்; கடந்த 24.05.2013ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் குறித்த பள்ளிவாயல்களில் தஹஜ்ஜத் அதான் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த விடயம் அமுல் தொடர்பில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையிடம் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Masha Allah.. A Great People.. and a Great Progress towards Allah SWA.. May Allah SWA make it easy and success and also great example to follow for other villages and cities as well.
ReplyDeleteபுதிய காத்தான்குடி தௌஹீத் ஜும்ஆப்பள்ளிவாசலில் இந்த 'தஹஜ்ஜத்' அதான் மிக நீண்டகாலமாகவே சொல்லப்பட்டு வருகின்றது.
ReplyDeleteஎப்போதோ நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை ஆராய்ந்து இந்த 'தஹஜ்ஜத் அதான்' சொல்வதை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையினர் காலங் கடந்தாயினும் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கதே!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இது முஸ்லிம்களை சந்தோஷப்படுத்தும் ஒரு இஸ்லாமிய நடைமுறை மாத்திரமல்ல.ஒரு மங்கிப்போன சுன்னாவாகும். ஒரு மங்கிப்போன சுன்னாவை ஹயாதாக்குபவன் 70சஹீது களுடைய நன்மையைப் பெருவான் என்ற ஹதீசை படித்த ஞாபகம் உண்டு.என்றாலும் இன்றைய கால நிலை இதற்க்கு
ReplyDeleteபொறுத்தமானதாக இல்லையென்றே படுகிறது. பாங்கில் ஆரம்பித்த இஸ்லாத்துக் கெதிரான பேரினவாதம்,எமது ஒவ்வொறு அசைவிற்கெதிராகவும் பேயாட்டம் ஆடிக்கொண்டிருப்பதை மறந்து விடக்கூடாது.மர்ஹும் அஷ்ரப் அவர்கள் அடிக்கடி சொன்னது போல”பிழையான நேரத்தில் எடுக்கப் பட்ட சரியான முடிவாகலாம்”
Masha Allah
ReplyDeleteஇந்த முன்மாதிரியை அம்பாறை மாவட்ட பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் ஊர்களின் ஜமியத்துல் உலமா சபை பின்பற்ற வழி செய்யுமா.......???
ReplyDeleteபிராதன வீதியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கிகளிலும் சொல்லலாமே! ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு சில நாட்களே ஐ வேளை அதான் ஒலித்தது.
ReplyDeleteஉண்மையில் சுன்னத்தை உயிர்ப்பிக்கும் நல்ல காரியம். நம் முஸ்லிம்கள் தொழுபவர், தொழாதவர் எல்லோரும் விரும்புவர்.
ReplyDeleteஇன்னும், வித்று, தஹஜ்ஜுத் போன்றவைகளை தொழாதவர்கள் மட்டுமின்றி மொத்தத்தில் தொழாதவருக்குக் கூட இது ஒரு ஊக்குவிப்பாக அமையலாம். அல்ஹம்துலில்லாஹ்.!!
இருந்தாலும், ஒன்றை யோசிப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.
அணையும் விளக்கு சுடர்விட்டெரிவது போல் ஆகிவிடக்கூடாது.
இன்றைய கால சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கென்று உத்தியோகபூர்வமாக, பலராலையும் அங்கீகரிக்கப்பட்டு வழமையில் இருக்கும் விடையங்களை ஒவ்வொன்றாகக் களைவதற்கு முன்னெடுக்கப்படுகிறது.
எங்களது எத்தனையோ உரிமைகளுக்கு தடைவிதிக்க கோரப்படுகிறது. அதனை அரசாங்கம் மெதுவாக செய்துமுடிக்க தயாராகிறாது.
நாங்கள் நல்லது செய்கிறோம் என்று, நம்மவர்களில் சிலர்தான் அரசங்கத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். இங்கே அபிவிருத்தி எனும் போர்வையில் முஸ்லிம்களையும் முஸ்லிம் ஊர்களையும் காட்டிக் கொடுக்கிறார்கள்.
இப்போது ஒவொன்றாகக் கைவைத்து மாடு அறுப்புக்கும் தடை கோரப்படுகிறது. இரண்டு நாளைக்குப் பேசுவார்கள், அடுத்த நாள் விட்டுவிடுவார்கள் என்று இருக்க முடியாது.
ஹலால் சான்றிதழ், ஹிஜாப், காழி நீதி மன்றம் ஆகியவைகள் தொடர்பாக கொஞ்சம் குறைந்திருந்தாலும், மாடு அறுப்பு விடயம் வரலாறாக்கப்பட்டுவிட்டது.
தேரர் தீயில் குளிப்பாட்டப்பட்டாலும், வரலாறு மாடு அறுப்பை எதிர்த்துத்தான் அவரே தீக்குளித்தார் என்று பதியப்பட்டுவிட்டது.
இன்று இல்லாவிட்டாலும் என்றொ ஒரு நாள் மாடு அறுப்புக்கு எதிராக இவ்வரலாறு சாட்சி பகிரத்தான்போகிறது.
நமதூரில் மடுவம் பற்றிய பைலுக்கும் வேலையற்றுப் போய்விடும்.
நமக்குப் பின் வரும் மக்கள், இப்போது அரச படுக்கையில் உறங்கிக்கொண்டிருப்போருக்கெதிராக பிரார்த்திக்கத்தான் போகிறார்கள்.!!!
MashaAllah izay pol Muslims azeham uollah uorhalleiluml mummadukkatumaha .
ReplyDelete