ஜோர்தானில் தன்னைத்தானே சுட்டுக்கொன்ற இலங்கை யுவதியின் மரணத்தில் சந்தேகம்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
ஜோர்தானில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவரின் மரணம் தொடர்பாக பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டுளளனர்.
குறித்த பெண் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயாரான நாகேந்திரன் மங்களேஸ்வரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வாழைச்சேனை நாகேந்திரன் காந்திமதி(21 வயது) என்ற பெண்ணின் மரணம் தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ள தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி இது பற்றி தெரிவிக்கையில்
2010ம் ஆண்டு ஜுலை மாதம் 22 அன்று ஜோர்தான் நாட்டிலுள்ள வீடொன்றில் பணிப் பெண் வேலைக்கு மகள் சென்றிருந்தார்.
அதற்கு முன்பு அந்த நாட்டில் மற்றுமோர் வீட்டில் பணிப்பெண் வேலைக்கு நான் சென்று 4 ஆண்டுகள் பணிப் பெண்ணாக பணிபுரிந்து விட்டுச் சென்ற ஆண்டு 2012.08.15ம் திகதி நாடு திரும்பினேன். நான் நாடு திரும்பும் போது மகளையும் அழைத்தாலும் அவர் எதிர்வரும் ஜுலை மாதம் ஒப்பந்தம் முடிவடையும் போது வருவதாக தெரிவித்தார்.
நாடு திரும்புவதற்கு முதல் நாள் அதாவது2012 ஆகஸ்ட் 14 அன்றுதான் இறுதியாக மகளை சந்தித்தேன. வீட்டு எஜமான் அழைத்து வந்திருந்தார்.மூன்று மாத சம்பளத்தை என்னிடம் தந்தார்.
தான் வீட்டு எஜமானாலும் அவரது மகன் ஒருவராலும் துன்புறுத்தப்படுவது பற்றி அவ்வப்போது என்னிடம் கூமூறியும் உள்ளார்.
கடந்த 19ம் திகதி ஜோர்டானிலுள்ள இலங்கை தூதுவராலயத்திலிருந்த தொலைபேசி ஊடாக மகள் துப்பாக்கி சூடு பட்டு மரணமடைந்துள்ள தகவல் எமக்கு கிடைத்தது. இன்று சனிக்கிழமை சடலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனது மகள் தன்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வதற்கு காரணம் எதுவும் இல்லை. அவருக்கு துப்பாக்கியை இயக்க தெரியாது. இந்நிலையில் வீட்டுக்காரர்கள் மீதே சந்தேகம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Post a Comment