மாட்டிறைச்சி விற்பதை நிறுத்த முடியாவிட்டால் அதனை நாங்கள் செய்கிறோம் - சிங்கள ராவய
இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பெளத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிங்கள ராவய பிக்கு ஒருவர், 'மற்ற மதங்களுக்கு பௌத்தர்களை மாற்றுவதற்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவேண்டும். பசுவதையை தடைசெய்யும் விதத்தில் இறைச்சி வெட்டுவது தொடர்பான சட்டங்களை திருத்த வேண்டும்' என்று கோரினார்.
'அலரி மாளிகையிலிருந்து பதில் கிடைக்கவில்லை. இன்னும் பிக்குகள் தீக்குளிக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்களா? ஆனால் இனி நாங்கள் செத்தால் இன்னும் பலரையும் சேர்த்துக்கொண்டுதான் மரணிப்போம். மாட்டிறைச்சி விற்கும் கடைகளை இவர்களால் நிறுத்த முடியாவிட்டால் அந்த வேலையை நாங்கள் செய்கிறோம். ஆனால் எங்களுக்கு அதிகாரிகள் தடையாக இருக்கக்கூடாது' என்றும் அந்த பிக்கு ஊடகங்கள் முன்னால் எச்சரித்தார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்களின் நடுவே ஏற்பட்ட களேபரத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
சிங்கள ராவய அமைப்பு இலங்கையில் பொது பல சேனா போன்ற இன்னொரு கடும்போக்கு பௌத்தவாத அமைப்பு. அந்த அமைப்பின் கோரிக்கையின்படி, உயிரிழந்த பிக்குவுக்கு கொழும்பில் இறுதி நிகழ்வு நடைபெறவேண்டும் என்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பௌத்தவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கோரியுள்ளார். bbc

இவர்கள் சட்டத்தை கையில் எடுப்பதற்கு தயாராகின்றார்கள் அரசாங்கம் மௌனிப்பது ஏநோ!.
ReplyDeleteஇதே பேச்சை அசாத் சாலி பேசியிருந்தால் அவர் பயங்கரவாதி. என்ன நியாம்.தொழகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டம் இறைவனிடம் பிராத்திப்போம்.
இதுல எத்தனை பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுறவன் என்று அவன் மனசாச்சிக்கும் கடைக்கரனுக்கும் தான் தெரியும், பிக்கு மாட்டுக்கால் சூப் குடிப்பாங்கலாம் இறைச்சி சாபிடமாட்டங்கலாம்
ReplyDeletepaavam police kaaranga makkalta maamul vangittu upaharamaaha pikkumaarta adivanguranga. yaritta poai cholli aluradu.
ReplyDeleteஇவர்களை இப்படியே விட்டால் 'நாட்டை நிர்வாகிக்க முடியாவிட்டால் அதையும் நாங்கள் செய்வோம். அதிகாரிகள் தலையிடக்கூடாது' என்று தெரிவித்தாலும் தெரிவிப்பார்கள். அரசாங்கம் அச்சரியப்படுவதற்கில்லை.
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
can eat pig? ? karameee
ReplyDeleteமிருக வதையை பௌத்த மதம் மற்றுமல்ல இஸ்லாமும் தடைசெய்துள்ளது? நீங்கள் மிருக வதையை எதிர்த்துப் பேசுவது, மக்களுக்கு உணர்வூட்டுவது சரியான செயல்தான். ஆனால், மிருக வதைக்கு சம்பந்தமே இல்லாத மாடறுப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்?
ReplyDeleteஎந்த உயிரையும் அநியாயமாக அடிப்பது, தீணி கொடுக்காது கட்டிவைப்பது, சூடு தாங்காமல் வேகமாக ஓடுவதற்காக மாட்டுக்கு லாடம் அடிப்பது, முதுகில் சுட்டு எழுத்துகள் பதிப்பது, சுமக்க முடியாத சுமையை ஏற்றிச் செல்வது போன்றவையே மிருக வதை.
மாற்றமாக ஓர் உயிரை முறையாக உணவுக்காகக் கொலை செய்வது மிருக வதையாக இருந்தால் மாடு, ஆடு, பன்றி,கோழி, மீன், கருவாடு, மாசி, டின் மீன் என அனைத்தையும் எதிர்க்க வேண்டுமே.
வீணான பிரச்சினைகளை உருவாக்குவதைத் தவிர்த்து, உலக மக்களுக்கு மத்தியில் பௌத்த மதத்தைப் பற்றிய நல்லுணர்வை ஏற்படுத்துங்கள். ஒருவர் தீக்குளித்தார் என்பதற்காக தவறான சட்ங்களை உருவாக்க முணையாதீர்கள். எத்தனை தசாப்தங்களாக இந்த நாட்டு முஸ்லிம்களுடன் உங்கள் முன்னோர்கள் கைகோர்த்து வாழ்ந்துள்ளார்கள்? என சிந்தித்துப் பாருங்கள். மாற்று மதத்தை நிந்தனை செய்யாதீர்கள். அவரவர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்.