நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே தீக்குளித்த தேரரின் உடல் கையளிக்கப்பட்டது
மிருகவதை உள்ளிட்ட பல காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌர்னமி தினத்தில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் போவத்தே இன்தரதன்ன தேரர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டார்.
இதனிடையே, தீ மூட்டிக்கொண்டு மரணமாக போவத்தே இன்தரதன்ன தேரரது உடலை பெற்றுக்கொள்ளச் சென்ற தமக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக சிங்கள ராவய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பொரலை தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்து தேரரது பூதவுடல், தமது அமைப்பிற்கு அறிவிக்காமல், காவல்துறையினர் கஹாவத்தைக்கு கொண்டுச் சென்றுல்லதாக, அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரதன தேரர் சேவைக்கு தெரிவித்தார்.
இதனை கண்டித்து, சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் பொரலை பகுதியில் உள்ள மலர்சாலை ஒன்றுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலரிமாளிகை நோக்கிச் சென்று கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர்.
எவ்வாறாயினும், கஹாவத்த – போரோனுவ சுகதாராம விஹாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, மாளிகாகந்த நீதிமன்றத்தினால், தேரரது உடல் அவருக்கு கொடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையிலேயே, போவத்தே இன்தரதன்ன தேரரது பூதவுடல் ரத்திணபுரிக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment