Header Ads



பொது மையவாடியை அழுகுபடுத்தி சீரமைப்பது பற்றிய ஒன்றுகூடல்



(ரைஸ்)

கிண்ணியா நகரசபை நகரபிதா எம்.எம்.ஹில்மியின் தலைமையில் கிண்ணியா பொது மையவாடி அழகுபடுத்தி சீரமைப்புக்கான கலந்துரையாடல் நேற்று மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம்களின் அடக்கஸ்தளமாக விளங்கும் மையவாடிகள் பெரும்பாலும் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது. இதனால் பெரும்பாலான மையவாடிகள் பற்றைகளும், மரங்களும் நிறைந்ததாக காணப்படும் நிலையே அதிகமாக உள்ளது. இதனை கருத்திற் கொண்டு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மியின் முன்னெடுப்பில் கிண்ணியா பொது மையவாடியின் புனரமைப்பு வேலைகள் மிகவிரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரபிதாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கிண்ணியாவை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக கிண்ணியா பொது மையவாடியினை அழகுபடுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அதற்கு கிண்ணியாவில் இயங்கிவரும் இஸ்லாமிய அமைப்பான எம்.எப்.சி.டி ஒத்துழைப்புக்களை வழங்கவிருப்பதாகவும் நகரபிதா ஹில்மி தெரிவித்துள்ளார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 'இதுவரை காலம் இருந்து வந்ததை விட நான் முன்னெடுக்கும் திட்டத்தினால் கிண்ணியா மக்கள் பெரிதும் பயன்பெற வேண்டும். அதனடிப்படையில் கிண்ணியாவை அழகுபடுத்தும் முன்னெடுப்புக்கமைவாக கிண்ணியா பொது மையவாடியினை அழகுபடுத்தி சீரமைக்கவேண்டிய கடமைப்பாடு எனக்குள்ளது. மையவாடியின் உள்ளே கட்டம் கட்டமாக பிரித்து ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் ஒழுங்குகளும், உள்ளே நடந்து போவதற்கான சிறு நடைபாதைகளை அமைப்பதும், நீர்த்தேவைக்கான நீரிணைப்புக்களை அமைத்துக் கொடுப்பதற்கும், உள்ளிடத்தை அழகுபடுத்தவும் நடவடிக்கையினை எடுத்துள்ளேன். இதற்கான வேலைகளை இம்மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் அத்தோடு இதில் இணைத்துக் வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும்' நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவித்தார். 

குறித்த ஒன்றுகூடலின் போது நகரசபை நகரபிதா எம்.எம்.ஹில்மி, எம்.ஐ.எம்.ஜம்சித், எம்.ஐ.நிஜாம்தீன், எம்.நௌசாத் மற்றும்  எம்.எப்.சீ.டி அமைப்பின் தலைவர் எஸ். நிஹாஸ் உட்பட எம்.எப்.சீ.டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.