Header Ads



ஆஸாத் சாலிக்கு ஆதரவாக நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்


கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு முன்னாள் மேயர் ஆஸாத் சாலிக்கு ஆதரவாக நாளை வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்கு பின்னர், தெவட்டஹகா பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகள் பெருமளவு கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கள, தமிழ் தலைவர்களும் இதில் பங்கேற்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸாத் சாலியை ஊடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியும், ஆஸாத் சாலிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்துவதுமே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமென நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தனர்.

14 comments:

  1. கண்டிப்பாக செய்யவேண்டும் இதை தடுப்பதற்கு அரசாங்கம் பலவழிகளையும் கையாளும் ஆனால் நாம் கண்டிப்பாக சகோதர் ஆசாத்சாலிக்கு கைகொடுப்போம். அத்துடன் அல்ஹம்துலில்லாஹ் அவருக்குக் கிடைக்ககூடிய ஆதரவுகள் அதிகரிப்பதற்கான வழிகள்தான் இன்ஸா அல்லாஹ் துஆச்செய்வோம்.....

    ReplyDelete
  2. insha allaha we are we are always with you sir.you are the real hero for us allaha always with you & we also with u (sri Lankan Muslims)

    ReplyDelete
  3. This is a good opportunity to show the strength of Sri Lankan Muslims. Pls don't lose this chance.

    ReplyDelete
  4. ஆர்ப்பாட்டத்தோடு நிறைவு பெற்று விடாமல் அவரை வெளியே கொண்டு வருவதற்கான அணைத்து சட்ட நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்டவர்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  5. அரசியல் பழிவாங்கள், தனது இணத்துக்காக குரல்
    கொடுத்த ஒரு மனிதரை உடல் உள ரீதியாக பலவீனப் படுத்தி மற்றவர்களையும்
    அச்சுருத்தும் நடவடிக்கை இது முஸ்லிம் சமூகத்தை அச்சுருத்த முஸ்லிம்களை
    வைத்தே காரியம் சாதிக்கிரார்கள். இன்ஷா அல்லாஹ் இதுவும் கடந்து போகும்
    சகோதரர் அசாத் சாலி உண்னாமல் இருந்து உடல் நலனை கெடுத்துக் கொள்ளாதீர்கள்
    நீங்கள் இந்த சமூகத்திற்க்கு தேவை.

    ReplyDelete
  6. அவரின் விடுதலைக்காய் நம்மாலான முயற்சிகளை செய்வோம் அல்லாஹ்விடம் துஆ செய்வோம் இன்சாஹ் அல்லாஹ் வல்லநாயன் அவருக்கு உதவியலிப்பான்

    ReplyDelete
  7. Insha Allah Allah with you. He will protect you. Don;y Very my leader.

    ReplyDelete
  8. இன்ஷாஹ் அல்லாஹ் இறைவனின் உதவி அவருக்கு நிச்சயம் கிடைக்கும்

    ReplyDelete
  9. Mahinda and his dogs are digging their own graves.Allah will put them at the right place very soon Insah Allah. Let us pray we are insulted just because we belive Allah and his straight path.

    ReplyDelete
  10. கண்டிப்பாக அல்லாஹ்வின் உதவி அவருக்கு எப்போதும் இருக்கும்

    ReplyDelete
  11. தயவு செய்து அலரி மாளிகையில் முல்லு சூப்புபவர்கள் வந்தால் துரத்தி அடிக்கவும்

    ReplyDelete
  12. Inshaallah We will take part,.

    ReplyDelete
  13. இன்ஷா அல்லாஹ்...... நானும் கலந்து கொள்வேன்.. நிகழ்ச்சி சிறப்புற எமது நல்லாசிகள்

    ReplyDelete

Powered by Blogger.