ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துமாறு முஸ்லிம் நாடுகள் வலியுறுத்து
உலகில் முஸ்லிம்கள் வாழும் நாடுகளை மையப்படுத்தி சர்வதேச ஆய்வு நிலையம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி சரீஆ சட்டத்தை தமது நாடுகளில் அமுல் படுத்த அவர்களில் பெரும்பாலானோர் தமது விருப்பங்களை தெரிவித்துள்ளனர்.
இவ் ஆய்வு நிலையத்தின் (The Pew Research Center’s Forum on Religion & Public Life) மூலம் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் 39 நாடுகளின் 38000 பேரை உளவாங்கி இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளனர். அதன் பிரகாரம்,
டியுனீசியா 56%
நைஜீரியா 71%
இந்தோனேசியா 72%
எகிப்து 74%
ஆப்கானிஸ்தான் 99%
பாகிஸ்தான் 84% ஆனோர் சரீஆ சட்டத்துக்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த ஆய்வின் படி துருக்கியில் நூற்றுக்கு 12% ஆனோரே தமது நாட்டு சட்டத்தை சரீஆ சட்டமாக மாற்றுவதற்கு விருப்பங்களை தெரிவித்துள்ளனர்.

We would like be here also...
ReplyDelete