தேசிய படை வீரர்கள் நினைவாக ஜனாதிபதி மலரஞ்சலி!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
இலங்கையில் 30 வருட காலம் நீடித்த கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உயிர்த் தியாகம் செய்த தேசிய படை வீரர்கள் நினைவு தின பிரதான வைபவம் இன்று மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகில் இடம்பெற;றது.
உயிர்த் தியாகம் செய்த படை வீரர்கள் நினைவாக ஒரு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
படை வீரர்களின் நினைவுத் துபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தியபின்னர் படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் சுகம் விசாரித்தார். அந்தி மாலை நேரம் படை வீரர்களின் நினைவாக அவர்களின் குடும்பத்தினர் தியாகச் சுடரேற்றினர்.



Post a Comment