இலங்கையில் மாத்திரமே குத்துவிளக்கேற்றும் பழக்கம் உள்ளது - உலக வங்கி பிரதிநிதி
(தினகரன்) வைபவங்களின் போது குத்துவிளக்கேற்றும் இடங்களை அலங்காரப் படுத்துவதற்கு யுவதிகளை பயன்படுத்தும் முறையினை முழுமையாக தடைசெய்வதற்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் மூலம் பெண் பிள்ளை கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுவதாகவும், அவர்களது சுகாதார நிலை பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
பெண் பிள்ளைகள் விளக்கேற்றும் இடங்களில் ஒரே இருப்பில் 30 - 40 நிமிடங்கள் இருப்பதன் மூலம் அவர்களுக்கு நரம்பு நோய்கள் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு இடமுள்ளதாகவும் இரத்த நாளங்கள் தடைப்படுவதனால் நினைவிழப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் விளக்கிக் கூறினார்.
மேலும் விளக்கேற்றுவோர் அவர்களை தொடுவதன் மூலம் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
இதற்கு கருத்துத் தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி டாக்டர் மொஹொனா விழாக் களின் போது : குத்துவிளக்கேற்றும் பழக்கம் இலங்கையில் மாத்திரமே உள்ளதாக கூறினார்.
மேலும், சுகாதார அமைச்சரின் கூற்றை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொள்வதாகவும் அதன்படி சுகாதார அமைச்சரின் தீர்மானத்தை பாராட்டுவதாக வும் கூறினார்.

Post a Comment