Header Ads



உண்மைக்கு புறம்பான விடயம்


(அகமட் எஸ். முகைடீன்)

“உதயன் பத்திரிகை இலங்கை இரானுவத்தால் தாக்கப்பட்டது” என கல்முனை முதல்வர் தெரிவித்தார் என வெளிவந்த செய்தியினை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் முற்றாக மறுத்துள்ளார். 

முதல்வர் மேலும் தெரிவிக்கையில் உதயன் பத்திரிகை தாக்கப்பட்ட விடயமானது கண்டிக்கத் தக்க செயலாகும். எந்த ஒரு ஊடக நிறுவனம் தாக்கப்பட்டாலும் அது கண்டனத்திற்குரிய விடயமாகும். நாட்டின் ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தவகையில் இச்செயலைச் செய்தது யாராக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உதயன் பத்திரிகையை தாக்கியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் மேற் கொள்ள வேண்டும் என கடந்த கல்முனை மாநகர சபை அமர்வின்போது உதயன் பத்திரிகையினை காண்பித்து உரையற்றியதை திரிவு படுத்தி “உதயன் பத்திரிகையினை தாக்கியது இலங்கை இரானுவம்” என குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயமாகும் என முதல்வர் தெரிவித்தார்.

1 comment:

  1. இலங்கையில் நீதி நீயாயம் ஊடக உரிமை தனி நபர் உரிமை மனித உரிமை எதுவித உரிமையும் யாருக்கும் கிடையாது, அரசாங்கம் எதுவேண்டுமானலும் செய்யலாம் யாப்பு, சட்டம் அரசாங்கத்திற்கு ஏற்றவாறு அடிக்கடி மாற்றப்படும். இதையாரும் ஒன்றும் செய்ய முடியாது.

    உதாரணமாக அரசாங்கத்திலுள்ளவர்கள் வாகன வியாபரம் செய்யவேண்டுமானால் அவர்களே உடனே வாகன இறக்குமதிக்கான வரியை உடனே குறைத்துவிட்டு தேவையான அளவிற்கு இறக்கிவிட்டு உடனே பழைய படி வரியை கூட்டிவிடுகிறார்கள், இது ஒரு விடயம்தான் இதுபோன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களும் ஆதாரங்களும் உள்ளன.

    அணையப்போகும் தீபம் பிரகாசமாக எரிந்துவிட்டுத்தான் அணையும்.

    ReplyDelete

Powered by Blogger.