நாய் கடியில் சாதனை படைத்த அமெரிக்கா..!
தபால் பட்டுவாடா செய்யும் போது தபால் துறை ஊழியர்கள் நாய் கடியால் பாதிக்கப்படுவது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.நாய்கள் ஜாக்கிரதை எச்சரிக்கை பலகை உலகளவில் பல வீடுகள், பங்களாக்களில் வைக்கப்படுகின்றன. தெரிந்தவர்களை, நன்றாக பழகியவர்களையே பல வேளைகளில் செல்ல நாய்கள் கடித்து வைக்கின்றன. அப்படி இருக்கும் போது, அரசு சீருடையில் வருபவர்களை பார்த்ததும் சும்மா இருக்குமா? குறிப்பாக நாய்களால் அதிகம் பாதிக்கப்படுவது தபால் துறை ஊழியர்கள்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தபால் துறை சேவை செய்தி தொடர்பாளர் ஈவா ஜேக்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்தான் கடந்த ஆண்டு, தபால் ஊழியர்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 5,879 பேரை நாய்கள் கடித்துள்ளன. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் கடிதம் பட்டுவாடா செய்யும் போது 69 ஊழியர்களை நாய்கள் கடித்து குதறியுள்ளன. அடுத்ததாக சியாட்டில், வாஷிங்டன், சான் அன்டானியோ, டெக்சாஸ் ஆகிய நகரங்களில் 42 ஊழியர்களை கடித்துள்ளது. 3வது இடத்தில் சிகாகோ (41) நகரம் உள்ளது.கடந்த 2011ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 83 ஊழியர்களை நாய்கள் கடித்துள்ளன. நாய் கடி அதிகம் உள்ள 20 நகரங்களின் பட்டியலில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Post a Comment