மடவளை மதீனா மத்திய கல்லுரிக்கு உயர்தர வகுப்புக்கு மாணவர் சேர்க்கும் வைபவம்
(J.M.Hafeez)
மடவளை மதீனா மத்திய கல்லுரி 2013-14 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர புதிய மாணவர் சேர்க்கும் வைபவம் இன்று இடம் பெற்றது. கல்லூரி அதிபர் செல்வி நூருல் ஹிதாயா உரையாற்றுவதையும் புதிய மாணவர்கள் மற்றும் அவர்கள பெற்றோர்களின் ஒரு பகுதியனரையும் இங்கு காணவாம்.
இங்கு உரையாற்றிய அதிபர் தெரிவித்ததாவது,
இன்று பாடசாலை மாணவர்களது கட்டுப்பாடு குன்றி வருவதாகவும் பெற்றோரின் கண்காணிப்பு காணப் படுமாயின் இதனை மிகக் குறுகிய காலத்தில் கட்டுப் படுத்தி விடமுடியும் என்றும் கூறினார்.
மாணவர்கள் விடயத்தில் இறுக்கமான உடை அணிதல், வகைவகையான முறையில் தலைமுடி வெட்டுதல், கைத் தொலைபேசி பாவித்தல் முறையற்ற காலணிகள், போன்ற விடயங்கள் பாடசாலையின் கட்டுப்பாட்டை மீறி நடப்பவைகளாகும். இதனை கட்டுப் படுத்தும் கடற்பாடு மட்டுமல்ல அதற்கான உரிமையுடையவர்கள் பெற்றோர்கள்தான். எனவே இது விடயமாக பெற்றோர் பாராமுகமாக இருப்பின் பாடசாலைகளால் முற்றாகத் தடுத்து விட முடியாது என்றார்.
மாணவிகள் விடயத்திலும் இறுக்கமான ஆடைகளை அணியும் பழக்கத்தை தவிர்ந்து கொள்ளுமாறும் குறிப்பிட்டார். சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் இதில் பங்கு கொண்டனர்.



Post a Comment