மாரடைப்பினால் ஆசிரியை மரணம்
மன்னார் தாராபுரத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட பஸ்லியா ஹாரீஸ் ஆசிரியை 17-05-2013 வெள்ளிக்கிழமை மாரடைப்பினால் புத்தளத்தில் காலமானார். புத்தளம் உலுக்காப்பள்ளம் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றும் இவர் புளுதிவாசல் பாடசாலை ஆசிரியர் எச்.எம்.ஹாரீஸ் அவர்களின் மனைவியும், இளைப்பாரிய அதிபர் முகம்மது அலி, லைலா உம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியுமாவார் இறக்கும்போது இவரது வயது 40 ஆகும். அன்னாரின் ஜனாசா உலுக்காப்பள்ளம் மைய வாடியில் 18-05-2013 நல்லடக்கம் செய்யப்பட்டது பெருந்திரளான மக்கள் அன்னாரின் ஜனாசா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்.
-தகவல்.ஏ.எச்.ஏ. வதூத். அதிபர். (உறவுமுறை-மாமா)

Post a Comment