Header Ads



விடமாட்டோம் உனைத்தனியாய்..!



(ஏ.எச்.எம். மவ்ஜுத் - ஹிஜ்ராபுரம்)

முஸ்லிம் தமிழ் தேசியம் 
முகவரியே பேரின அகராதியின்
முதன்மை பயங்கரவாதம்
முத்திரையிட்ட முகவரி

முடக்கி விட்டார்களாம் 
முண்ணணி இனப்போரை
முடுக்கி விட்டார்கள் 
முஸ்லிம் மதப் போரை

அடக்கி விட்டார்களாம்
அதீத பயங்கரவாதத்தை
அடுக்கி விட்டார்கள்
அநியாய அரங்கேற்றங்களை

அடைகாக்க வைத்தார்கள்
அரசாசாமிகளை
அடக்க மறுத்தானாம் அசாத்
அநியாய எதிர்ப்பை

எட்டிய திசைகளுக்கு 
எத்தி வைத்தானாம் எம்மவர் நிலையை
எஞ்சிய திக்குகள் எட்டப்படமுன் 
எடுபட்டாய் எச்சரிப்பாய்

சால்வைக்குள் குளிர்காய
சாரியாய் சேரும்போது
சகவாசமே தரித்திரமென 
சமயோசிதமாய் நழுவிய விளைவா?

ஊன்றிவிட்ட மதப்போரைவிட
உயர்ந்துவிட்ட உன் குரலை
உடனே அடக்கிவிட
உயர்பீட உத்தியே

உலக இஸ்லாமிய எதிர்ப்புக்கு
உடந்தை போக
ஊக்கமாகும் 
உத்தியோ

ஆதாரமற்றவைகளுடன்
ஆக்ரோசமாக இஸ்லாத்தை
ஆட்டம் காண வைத்தால்
அடுத்த ஜெனீவாவில் அமெரிக்கா அடங்குமா

ஓராயிரம் குற்றங்கள் குவிந்தாலும்
ஒன்றுமே எடுபடாது எம்மவனே
அகிலமே அறியவேண்டும் 
ஆதாரமிலா ஆக்கிரமிப்பென

சீண்டும் கலாசாரத்தை
மீண்டும் எதிர்க்க உன்
மிடுக்கான குரல் கேட்க
நடிப்பற்ற நன்நெஞ்சங்களுடன் 

துல்லியமாய்  துள்ளிய
தூரிகையாய் துயர் வரைந்த
துடுப்புண்னை தடுப்பதுதான் துரும்போ
தடுக்கியது பேரினத் தன்னலம

வலிகண்ட ரணம் ஆற
விரைவான விடுதலைக்காய்
வழிமேல் விழிவைத்து 
விழிமேல் உமைவைத்து
வருகைக்காய் விழைகிறோம
எமக்கெனவே நீ பிறந்தாய்
எமக்காக வாய் திறந்தாய்
ஏங்கி மல்கிறோம்; ஏந்துகிறோம் கரம்
என்னமோப்பா எம்மால் முடிந்தளவு
எழுது கோல்களுடன் என்றும் உனக்காக

விடமாட்டோம் உனைத்தனியாய் அகப்படோம் இனித்தொடராய்
வரவேண்டும் நீ துணைக்கு, வேண்டும் நீ எமக்கு
விருப்பு வீறாப்புடன் விதையான எழுது கோல்களுடன
வரிசையாகிறோம் உன் பாதம் போகும் பாதை வர
வலிமை வழங்கிட வழிகோலுமா வளர் வாரிசுகள்? 

பள்ளி பள்ளியாய் பிரிந்தோமே
பல்வகை இயக்கமாய் ஒதுங்கினோமே இதனால்
பலன்கண்டு பழிதீர்ப்பதார்?
பரிதாபமில்லையா பிரிந்தது போதும்
புரியப்பார் குனியாது நிமிரப்பார்
பக்கத்திலே கருவருப்பார் பலரிருப்பார்  
பத்திரமாய் நழுவப்பார் 
பாரிலே நன்மதிப்பை சுவீகரிக்கப்பார்

6 comments:

  1. ஆசாத் சாலி சேர் உங்களை ஒரு போதும் தனியாக விடமாட்டோம்....... யார் இல்லாவிட்டலும் முஸ்லீம் இளைஞர்கள் நாம் இருக்கிறோம் ..... இஸ்லாத்தில் கூறியதைப்போன்று இந்நாட்டு முஸ்லீம்களின் உடமைக்காகவும் உரிமைக்காகவும் போராடும் முதல் இல்லாமிய போராளி நீங்ககே.........

    ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகளைப்போன்றும் ஜம்மியத்துல் உலமாசபையைப்போன்றும் தீர்கமான முடிவுகள் என்றும், நுனுக்கமாக காய்கள் நகர்த்துகின்றோம், சிங்கள பிரதேசத்தில்உள்ள முல்லீம்களுக்கு ஆபத்து என்றும் என்றும் காலத்திற்கேற்ற கதைகளும், பிடியில்லா அறிக்கைகளையும் விட வில்லை என்று அல்லாஹ் நன்கறிந்தவன்....

    அன்று நபியவர்கள் (ஸல்) காய்நகர்தவும் இல்லை கதைவிடவும் இல்லை... அவர்கள் கூறினார்கள், உங்களின் உரிமைக்கும் உடமைக்கும் ஆபத்தென்றால் அதற்கெதிராக போர் தொடுக்கவேண்டும்...... அதில் நீ வபாத்தானால் ஷஹீத் என்ற உயர்ந்த பட்டத்தினை பெறுவாய்......

    Dear Jaffnna Muslim,
    Please publish it with your news...If u need any official detail, i will give my self, because all the Srilankan Muslims want to know about this, they thought our ministers and Ulama Saba will face all the problem and they will solve,

    ReplyDelete
  2. we need asad sali out as soon as possible all muslim MP should support him as he is a muslim.

    ReplyDelete
  3. உங்களை இறையவன் பாதுகாக்க வேண்டும். அத்தோடு சமூகத்துக்கு பேச முன், உங்க சொந்த வீட்டுக்குள்ள கொஞ்சமாவது மார்க்கம் இருக்கும்படியாக அட்வைஸ் பன்னுக்க சார். ஏனென்றால் உங்க மகள் டிவி முன்னிலையில் அந்நிய நிர்வாண கோலத்தில் பெட்டி கொடுக்குறது ரொம்ப அசிங்கமாக உள்ளது. அதுவும் உங்க மகள் அப்படி பப்ளிக்ல வரலாமா???? என்ன கொடும சார் இது???? இஸ்லாம் பேசுகின்ற உங்களுக்கே அசிங்கம் சார் இது.......

    ReplyDelete
  4. Good one mohamed....we r with him

    ReplyDelete
  5. ஆஸாத் சாலி அவர்களின் விடயத்தில் கருத்துக்களை முன்வைப்பவர்கள் தங்களது சொந்தப் பெயர், முகவரிகளையும் அடிக்குறிப்பிட்டால் இன்னும் வலுவுள்ளதாக இருக்கும். இன்னும் நாம் பயந்த சமூகமாக இருக்கக்கூடாது!

    'சொல்வதைத் தெளிவாகவும், உலகறியவும் முகங்காட்டிச் சொல்வோம்'

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  6. இன்சாஹ் அல்லாஹ் ஆசாத்சாலி உடன் கை கோர்ப்போம்



    ReplyDelete

Powered by Blogger.