பிரான்ஸில் பள்ளிவாசலை மூடுமாறு உத்தரவு - எதிராக முஸ்லிம்கள் போராட்டம்
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகர் பகுதியான மொன்ட்ரொஜில் உள்ள பள்ளிவாசலை மூட நகர மேயர் உத்தரவிட்டதற்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னர் கடையாக இருந்த பகுதியை சட்ட அனுமதியுடன் மொன்ட்ரோஜ் முஸ்லிம்கள் பள்ளிவாசலாக அமைத்துள்ளனர். ஆனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்தப் பள்ளிவாசல் கட்டாயம் மூடப்பட வேண்டும் என நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அந்தப் பகுதி முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்துவதற்கான இடமொன்று இல்லாமல் போயுள்ளது.
மொன்ட்ரோஜ் நிர்வாகத்தினர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்ட போதும் நகர மேயர் மாத்திரம் எதிராக செயற்படுவதாக அப்பகுதி முஸ்லிம்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மொன்ட்ரோஜ் நகர மேயர் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி அரசின் கூட்டணி கட்சியான வலது சாரி யு. டி. ஐ. கட்சியை சேர்ந்தவராவார். பிரான்ஸின் தற்போதைய சோசலிஸ அரசில் நன்டஸ் மற்றும் ஸ்டர்பேர் போன்ற பெரிய நகரங்களில் முஸ்லிம்களுக்காக பள்ளிவாசல்கள் திறக்கப்பட்ட போதும் மொன்ட்ரோஜ் முஸ்லிம்கள் மாத்திரம் பள்ளிவாசல் இன்றி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. tn

Post a Comment