Header Ads



ஹிஸ்புல்லாவின் விளக்கம்..!

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

தலைவர்,செயலாளர்,                                                                   நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்,
காத்தான்குடி-06.

அன்புடன்,           அஸ்ஸாலாமு அலைக்கும் (வறஹ்)

தங்களுடனான நேரடி கலந்துரையாடல் எனும் தலைப்பிட்டு தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் 25.05.2013 அன்று கிடைத்தது. அல்ஹம்துலிழ்ழாஹ்.

கடந்த 22.05.2013ம் திகதி நடந்த தங்களுடைய சூறா சபை கூட்டத்தில் என்னுடன் பகிரங்க பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தீர்மானித்ததாகவும்இ அதற்காக காலம்தாழ்த்தாது விரைவில் திகதியொன்றை தருமாறும் கேட்டிருந்தீர்கள்.

நான் 17.05.2013ம் திகதி அன்று ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் நிகழ்த்திய உரையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதை எண்ணி மனவேதனையடைகின்றேன். இலங்கை நாட்டில் முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு,  தலை நிமிர்ந்து வாழ்வதற்கு முதலில் முஸ்லிம் உம்மத்துக்கிடையில் சகோதர உணர்வும்இ ஒற்றுமையும் பலமாக இருப்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவிருக்கின்றது. 

எமது தாய் நாடான இலங்கை நாட்டின் சட்டப்படி தேர்தல் காலங்களில் நாம் வேறு குழுக்களாக பிரிந்து போட்டியிட்டாலும் தேர்தலுக்கு பின்பு நாங்கள் காத்தான்குடி வாழ் ஒரு தாய் மக்கள் என்ற சகோதர உணர்வுடனும், போட்டி, பொறாமை, சுயலாபங்களுக்கு அப்பால் இந்த ஊரின் அபிவிருத்திக்காகவும், எமது எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும் நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டியது எமது கடமையாகும். இதையே அல்-குர்ஆனும் வலியுறுத்துகின்றது.

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். 49:10

இத்தகைய அரசியல் கலாசாரத்தை கருத்திற்கொண்டே நான் உங்களுடன் ஊரின் அபிவிருத்தி தொடர்பாக குறைந்தது மூன்று மாதத்திற்கொரு முறையாவது கலந்துரையாடுவதற்கு தயார் என்று மேற்படி கூட்டத்தில் பேசியிருந்தேன்.

ஆனால் நீங்கள் அழைத்திருப்பது போன்ற பகிரங்க பேச்சுவார்த்தை என்ற பெயரில் அமைந்த 'விவாதத்திற்கு' அல்ல. இவ்வாறான பகிரங்க மேடைகளில் நீங்கள் எங்களை விமர்சிக்க, அதன் பின்னர் நாங்கள் உங்களை விமர்சிக்க இறுதியில் எதற்கும் பிரயோசனமற்ற ஒரு கலந்துரையாடல் மேடையாகவே அது அமையும். 

நீங்கள் சொல்வதை போன்ற மேடைகளை அமைக்கும் போது அது எமக்கிடையில் இருக்கும் கருத்துவேறுபாடுகளை அதிகரிக்குமே தவிர ஆக்கபூர்வமான எந்தவொரு அபிவிருத்திக்கும்இ நல்ல திட்டங்களுக்கும் வித்திடாதென்பது உண்மையாகும்.

நான் அழைத்த கலந்துரையாடலின் நோக்கம் நமது கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றிணைந்து நம் மண்ணை கட்டியெழுப்புவதற்காககவும், நமது நாட்டு முஸ்லிம்களின் பிரட்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், நமது பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் தங்களுடன் கலந்தாலோசித்து நல்ல திட்டங்களை உருவாக்குவதே ஆகும். இவ்வாறான ஒரு கலந்துரையாடலுக்கு நீங்கள் அழைக்கும் பட்சத்தில் இன்ஷா அழ்ழாஹ் என்னுடைய நேரத்தை ஒதுக்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.

எம்மனைவரின் நல்லெண்ணங்களையும், நல்ல செயல்களையும் அழ்ழாஹ் அங்கீகரித்து நாம் அனைவரும் ஓற்றுமையாக சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கும், ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைப்பதற்கும், நாம் அனைவரும் நேரான பாதையில் செல்வதற்கும் அழ்ழாஹ் துணை புரிவானாக என்னும் துஆ பிரார்த்தனையுடன் விடைபெறுகின்றேன்.

வஸ்ஸலாம்

இவ்வண்ணம்

ஹிஸ்புழ்ழாஹ் mp

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்



5 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    காத்தான்குடி மகன் என்பதுக்கும் அப்பால் இந்த நாட்டின் முக்கிய அமைச்சாகிய பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் ஒருவர் ஒரு முஸ்லிம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒரு குழுவினரை அழைக்கும்போது அவர்கள் அதனை உதாசீனப்படுத்தினால் இஸ்லாத்தின் பார்வையில் அது பெருமை,கர்வம் உள்ளசெயலாகவே கணிக்கப்படும் .இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்துவதன் ஊடாக பிரதேசத்தின் கல்வி மேம்பாடு ,வறுமை ஒழித்தல் ,வட்டியற்ற பொருளாதார ஒழுங்குகள் இன்னும் இதுபோன்ற பல விடயங்களை நன்கு திட்டமிட்டு தடைகளின்றி செயற்படுத்த முடியும் .எமது குறுகிய ஆயுட்காலத்தில் நேரங்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள அல்லாஹ் அருள்பாலிப்பானாக .

    ReplyDelete
  2. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் குறிப்பிட்டிருந்த 'பகிரங்கக் கலந்துரையாடல்' என்ற சொற்பதத்தை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என நான் கருதுகிறேன்.

    தனிப்பட்ட முறையில் ந.ம. இயக்கமும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக பேசும்போது அங்கும் ஒரு 3ம் தரப்பினால் கொமிஷன், கொந்தராத்துக் குற்றச்சாட்டுக்கள் எழலாம்.

    அதனால் பிரதியமைச்சர் தெரிவித்திருப்பதுபோல் 'மேடை' அமைத்து பலரும் இருந்து விவாதத் தோரணையில் இக்கலந்துரையாடலுக்கு வழியமைக்காமல் நான்கு சுவர்களுள்ள ஒரு விசாலமான அறையில் இந்தப் பகிரங்க கலந்துரையாடலை நிகழ்த்தலாம்.

    பிரதேசத்திலுள்ள சம்மேளனம், ஜம்இய்யதுல் உலமா, நகர சபை, பிரதேச செயலகம், தஃவா அமைப்புக்கள், ஊடக அமைப்புக்கள், ஜும்ஆப்பள்ளிவாசல்கள் போன்ற முக்கிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், துறைசார் புத்திஜீவிகளும் உள்ளடங்கிய ஒரு குழுவினருக்கு முன்பாக பிரதியமைச்சர் தரப்பும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத தரப்பும் இக்கலந்துரையாடலை நடாத்த முன் வரலாம்.

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினர் எழுதிய கடிதத்தில் 'பேச்சுவாhத்தை' என்ற பதமும் உள்ளடங்கியுள்ளதை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கவனத்திற்கெடுக்க வேண்டும்.

    இவ்வாறு பல்தரப்பும் சம்பந்தப்பட்ட குழுவின் முன்னிலையில் பேசும்போதுதான் ஒரு அபிவிருத்தியின் நன்மை தீமைகளைப் பற்றி இருதரப்பும் பேசும்போது, சூழவுள்ள இப்பல்தரப்பு பிரமுகர்களாலும் எவருடைய கருத்தில் நீதியும், நியாயமும், மக்களுக்குப் பயன்தரக்கூடிய அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன என்பதை சாட்சிகளாக இருந்து அவதானிக்கவும் முடியும்.

    இவ்வாறில்லாமல் இவரும், அவரும் தனிப்பட்ட முறையில் ஊரின் அபிவிருத்தி பற்றி மூடிய அறைகளுக்குள் பேச இதுவென்ன இவர்களின் தனிப்பட்ட வியாபார நடவடிக்கையா?

    ஊரின் நலன் சார்ந்த விடயமென்றால் ஊரின் நாலு பிரமுகர்கள் முன்னால் பேச முன்வருவதற்கு பிரதியமைச்சருக்கு என்ன தயக்கம்..?

    இன்னமும் ஆளாளுக்கு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்காமல் உருப்படியாக ஆகும் வழியைப் பாருங்கள். அல்லது உங்கள் பாணியிலேயே கருமங்களைத் தொடர்ந்து கொண்டிருங்கள்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. இப்படியான பசப்பு வார்த்தைகளால் சரிந்து கொண்டு போகும் செல்வாக்கை சரி செய்யலாம் என்று நினைக்காதீர்கள் ஹிஸ்புல்லா அவர்களே..!!!

    தயவு செய்து குர்ஆன் வசனங்கள், முஹ்மீன், முஸ்லிம் சகோதரர்.. போன்ற சொட்களைஎல்லாம் பாவித்து முனாபிக் தனமாக நடப்பதை தவிர்த்து,,, எல்லாம் வல்ல இறைவனை பயந்து, இஹ்லாசுடன் நடப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு,

    நல்லவர்களுடன் மட்டும் பதிலளிக்க முன்வர வேண்டும் அதைவிடுத்து சும்மா மழைக்கு முளைத்த காலங்களுக்கு பதிலளிக்க தேவை இல்லை என்று கூறிக் கோல்கின்ரன்.

    உங்கள் பணியை தொடர்ந்து செய்ய அல்லாஹ் துணை புரிய இறைவனை பிறர்திகின்ரன்.

    வஸ்ஸலாம்

    இப்படிக்கு

    இ. ஜம்சாத்
    கிண்ணியா

    ReplyDelete
  5. Dear Mr. Hisbullah,

    Please avoid mixing Noble Islamic words in order to fulfill your political motives. you are well aware that There is no development in Sri Lanka without big commissions going into your pockets. That's why all politician always talk about 'Development'. Foolish people don't understand that these moneies are borrowed from overseas and the country is in huge debt. Before develop the country, you all need to develop a Good heart at least not lieing in front of people using Noble Quran.

    ReplyDelete

Powered by Blogger.