பல்கலைக்கழக விரிவுரையாளரின் பாலியல் சேட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
(பாறூக் சிகான்)
யாழ் பல்கலைக்கழக மாணவிகளுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட முயலும் பொருளியல் துறை விரிவுரையாளர் செ. இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்பாட்டமொன்றினை மாணவர்கள் இன்று 30-05-2013 ஆரம்பித்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் குறித்த விரிவுரையாளருக்கெதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன் விரிவுரையாளரின் கொடும்பாவி மாணவர்களினால் எரியூட்டப்பட்டது.
மேலும் இவரின் பல்கலைக்கழக தனியறை மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருமளவான மாணவ ,மாணவிகள் பங்குகொண்ட இவ்வார்ப்பாட்டம் ஒரு மணித்தியாலம் நீடித்ததுடன் இறுதியாக துணைவேந்தருக்கு கலைப்பீட மாணவ ஒன்றியத்தினால் மகஜர் அனுப்பப்பட்டது.
நேற்று காலையும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் நுண்கலைக்கழக இசைத்துறை தலைவர் பாலியல் குற்றச்சாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டமைக்கு எதிராக 3ம் வருட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.





Hi Friends,
ReplyDeleteஇப்படி நடந்து கொள்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். அதேவேளையில் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதையும் தீர விசாரித்தறிய வேண்டும். ஏனென்றால் நாமறிந்த அபாண்டங்களிலேயே ஒருவனை இலகுவாக வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருவது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றுதான்.
தவறாக நடந்தகொள்ளும் ஒருவரை எதிர்த்து தைரியமாக வெளியில் வந்துவிட்ட மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை துணிச்சலோடும் வீரியத்துடனும் செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் அது என்ன மாணவர்கள் துணிவோடு முகம் காட்டி நிற்க மாணவிகள் கோழைத்தனமாக முகத்தை மறைத்துக்கொண்டு நிற்கின்றார்கள்? அப்படியானால் இது மாணவர்களின் வற்புறுத்தலோடு செய்யப்படும் ஆர்ப்பாட்டமா என்ன?
kaddayam ivene kallal adithu kolle venum.
ReplyDelete