Header Ads



சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் புறக்கணிப்பு


(பாறூக் சிகான்)

பங்காளிக்கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாட்டால்  சமூர்த்தி  உத்தியோகத்தர்  நியமனம். தொடர்பான  விடயம்   வெளிச்சத்திற்கு  வந்தது  இச்சம்பவம்  தொடர்பாக  மேலும் தெரியவருவதாவது,

யாழ் மாநகர சபையின் இவ்வாண்டிற்கான ஐந்தாவது (மே மாதம்) மாதாந்த கூட்டம்  இன்று பிற்பகல்(30.5.3013) பிற்பகல் 2 மணியளவில் முதல்வரின்  மாநாட்டு மண்டபத்தில் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமைணில் நடைபெற்றபோது  இது குறித்த விடயம் அம்பலத்திற்கு வந்தது.

திடிரென ஒழுங்கு பிரச்சினை ஒன்றினை சபையில் ஏற்படுத்தி தனது கோரிக்கையை முன்வைத்த அகில மக்கள் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களான அஸ்கர்  ரூமி,முகமட் மீராசாகிபூ முஸ்தபா  ஆகியோரை இடையில் குறுக்கிட்ட மற்றுமொரு ஈபிடிபி உறுப்பினரும்  மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரீகன் உங்களது மக்களுக்கு சனிக்கிழமை வழங்கப்படவுள்ள சமுர்த்தி நியமனம்  கிடைக்காமையினால் தான் இப்படி சபையில் நடக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக ஆராய்த போது சமூர்த்தி உத்தியோகத்தர் நியமனம் 240  பேருக்கு யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை வழங்கப்படவுள்ளது.
ஆனால் இப்பதவிக்காக 4 முஸ்லீம்கள் நேர்முகப் பரீட்சைக்கு சென்றிருந்தும் தெரிவு செய்யப்படவில்லை.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குறித்த நேர்முகப்பரீட்சை  தொடர்பாக மக்கள் மாநகர உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாநகர சபை உறுப்பினர்கள்  ஐவரதும் சிபார்சில்  தான் மேற்கறித்த 4 பேரும் நேர்முகப்பரீட்சைக்கு சென்றிரந்தனர். ஆனால் இதனை மறுத்த குறித்த இரு உறுப்பினர்களும் இது தேவையற்ற விடயம் என்றும்,இது தொடர்பாக எதும் கதைப்பதற்கும் இல்லை என வாதிட்டு அமர்ந்தனர். மீண்டும் சபை நடவடிக்கை  வழமையான நிலைமையில் சென்றது.


No comments

Powered by Blogger.