மனிதன் என்ற நிலைப்பாட்டில் சிந்திப்போமாக இருந்தால் பிரச்சினைகளுக்கு வாய்ப்பிருக்காது
(எம்.பைஷல் இஸ்மாயில்)
ஒரு சமூகத்தினுடைய நிகழ்வுகளில் மற்ற சமூகத்தினர் பங்கு பற்றுகின்ற போதுதான் அந்த சமூகத்தினுடைய விடயதானங்களை அறிந்து கொள்ள முடியும். நாங்கள் எல்லோரும் மனிதன் என்ற நிலைப்பாட்டில் சிந்திப்போமாக இருந்தால் எங்களுக்குள் பிரச்சினைகள் எதுவுமே இடம்பெற வாய்ப்பிருக்காது. என்று கல்முனை விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் கூறினார்.
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத தலைவர்களை ஒன்று கூட்டி இனமத ஒற்றுமையை வழுப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாடளாவிய ரீதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இச்செயலானது மூவின மக்களையும் ஒற்றுமையுடன் வாழவைக்க வேண்டும். என்ற ஒரு தூய சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்ற இவ்விடயம் வரவேற்கத்தக்கதும் பாராட்டப்பட வேண்டியதுமாகும். அந்த வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பௌத்த விகாராதிபதிகள் இருக்கும் கதிரையின் மேல் வெள்ளை துணி போடப்பட்டிருந்தது. சக சமயத் தலைவர்கள் அமர்ந்து கொள்ளும் கதிரைக்கு இவ்வாறு செய்யப்படவில்லை.
இதனை அவதானித்த நான் உடனடியாக நிகழ்வை ஏற்பாடு செய்த தீகவாபி இராணுவத்தினரிடம் கேட்டேன் இந்த கூட்டம் ஏன் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. நீங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நோக்கமே இந்த செயற்பாட்டினால் பிழைத்துக்கொண்டது. என்று சுட்டிக்காட்டி எல்லா சமய தலைவர்களுக்கும் ஒரே விதமான மரியாதையை தான் கொடுக்கவேண்டும். இந்த நிகழ்வுக்கு நான் முதலில் வந்ததனால் இச்செயற்பாட்டை அவதானிக்க முடிந்தது. இல்லை என்றால் இன்று உங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமதத் தலைவர்களை ஒன்று கூட்டி இனமத ஒற்றுமையை வழுப்படுத்தும் நிகழ்வாக இது கருதப்பட்டிருக்காது. மாறாக இனமத உறவை மேன்மேலும் பிரிக்கும் செயலாகவே இந்த நிகழ்வு அமைந்துவிடுவதுடன் கூட்டம் ஏற்பாடு செய்த நோக்கம் எல்லாமே பிழையாகி விட்டிருக்கும். என கூறினேன்.
சிங்கள, தமிழ், இஸ்லாம், கிரிஸ்தவம் என வேவ்வேறு சமயமாக இருந்தாலும் குறிப்பிட்ட அந்தந்த மதத்துக்கு அவர்கள் மத வழிபாட்டினை போதிக்கும் தலைவர்கள். இங்கு இஸ்லாம் வேறு, தமிழ் வேறு, சிங்களம் வேறு என்று பார்ப்பதன் மூலமே இன்று எமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாரிய பிரச்சினையாகும். நான் கல்முனை விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரராக இருந்தாலும் சரி ஒரு இஸ்லாமிய மௌலவியாக இருந்தாலும் சரி ஒரு கிரிஸ்தவ பாதராக இருந்தாலும் சரி எல்லா மதத் தலைவர்களுக்கும் ஒரே விதமான மதிப்பையும், மரியாதையும் கொடுக்கவேண்டும்.
அப்போதுதான் எல்லா மதத்தினரிடமும் ஒரு புரிந்துணர்வு, பரஸ்பரம் பேணி நடந்து கொள்வார்கள். மனிதர்கள் மனிதராக வாழும் வரை மனிதர்களிடத்தில் ஒரு ஒற்றுமை நிலவி காணப்படாது. ஒருவரை ஒருவர் குறை கூறுவதையும், இங்கு நடந்தவற்றை அங்கு சென்று பல மடங்காக்கி பேசுவததையும் முதலில் விட்டு விடவேண்டும். மனிதர்கள் எல்லோரும் சமம் என்று ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுத்து வாழ்வதன் மூலமேதான் மூவின மக்களும் ஒரு இன ஒற்றுமையுடன் வாழ முடியும்.
அதற்காக வேண்டி இன்று வந்துள்ள மதத் தலைவர்களும், ஊர் பெரியார்களும் நமது மக்களிடத்தில் இவ்விடயங்களைப்பற்றி தெளிவுபடுத்த வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு நம்மிலடத்தில் உள்ளது. மேலும் பல்லிண மக்கள் வாழ்கின்ற எமது நாட்டில் இன ஐக்கியம் மிக முக்கியமாக வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் எல்லா செயற்பாடுகளிலும் அபிவிருத்தியடைந்த மக்களாக நாமும், எமது நாடும் இருக்க முடியும். எல்லா சமயங்களும் இனமத ஒற்றுமையை மிகவும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது என்றார்.
.jpg)
.jpg)
SINGALAM, TAMIL, IVAI IRANDUM MATHAM? MOLIYA?
ReplyDelete