ஈரானில் கல்லால் அடித்து கொல்லப்படும் தண்டனை சட்டத்தில் திருத்தம்
ஈரானில், கள்ளக்காதல் செய்பவர்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஈரானில், 79ல், புரட்சி ஏற்பட்ட பின், அங்கு சட்டங்கள், கடுமையாக பின்பற்றப்படுகின்றன. கள்ளக்காதல், கொலை, போதை கடத்தல், கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை மண்ணில் புதைத்து, அவர்களை கல்லால் அடித்து கொல்லும் வழக்கம், ஈரானில் உள்ளது. பெண்களாக இருந்தால் தோள் வரை மண்ணில் புதைக்கப்படுவர். ஆண்களாக இருந்தால், இடுப்பளவு மண்ணில் புதைக்கப்பட்டு, கல்லால் அடித்து, மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்த சட்டத்துக்கு, ஐ.நா., கடும் கண்டனம் தெரிவித்தது. சர்வதேச நாடுகளும் இந்த தண்டனையை எதிர்த்தன. இதையடுத்து இந்த சட்டத்தில், ஈரான் அரசு திருத்தம் செய்துள்ளது.
"கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்து கொல்வதற்கு பதிலாக, மாற்று ஏற்பாட்டை, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியே அறிவிக்கலாம்' என, சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மாற்று தண்டனை எப்படி இருக்கும் என்பது விளக்கப்படவில்லை.

Post a Comment