13 நீடிக்குமா..? காத்திருக்கும் வடமாகாண மக்கள்
(அஸ்ஹர்)
இன்று ஊடகங்களில் ஊடகங்களில் அதிகம் பேசப்படுவது அரசியலமைப்பின் 13 வது திருத்தச்சட்டமூலமும்,வடமாகாணசபைத் தேர்தலுமாகும். இவ் இரு விடயங்கள் தொடர்பிலும்,பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையேயும்,பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயும் கருத்துவேறுபாடுகளும்,வாதப்பிரதிவாதங்களும் நிலவுவதை அறியமுடிகிறது .
இலங்கை வரலாற்றில் பல ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளதை நாம் அறிவோம். ஆவற்றில் முக்கியமானவை:
புண்டா,செல்வா ஒப்பந்தம்
டட்லி செல்வா ஒப்பந்தம்
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்
ராஜிவ் ஜேயார் ஒப்பந்தம்
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக உருவாக்கப்பட்டதே ஜேயார் ராஜிவ் ஒப்பந்தம்.இதன் பிரகாரமே இலங்கை அரசியல் யாப்பின் 13 சீர்திருத்தப் பிரகாரம் 08 மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.வடகிழக்கு மாகாணங்கள் நிபந்தனை அடிப்படையில் இணைக்கப்பட்டிருந்தன. ஆதிகாரங்களைப் பரவலாக்கும் நோக்குடனே இம்மாகாண சபை அறிமுகமாகியது.வடகிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தை முதன்முதலில் வரதராஜப்பெருமாள் தலமையிலான கட்சி கைப்பற்றிக்கொண்டது. பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகாரணமாக இரவோடிரவாக தனிநாட்டுப்பிரகடனத்தைச் ;செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச்சென்றார் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்.
இதன் பிற்பாடு ஆளுனரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் வடகிழக்கு மாகாணசபை கொண்டுவரப்பட்டது.வடகிழக்கு மாகாணசபை நீதிமன்றத்தால் தனித்தனியாகப் பிரிக்கப்படும்வரை ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்துவந்தது .கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகளின் கைக்கு அதிகாரம் கைமாறியது.முதலமைச்சராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.அவரின் தலைமையிலான மாகாண நிருவாகம் உரிய காலத்தைப்பூர்த்தி செய்ததும் 2013 தேர்தலில் பின்னர் நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு ஆட்சிநடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதே வேளை வடமாகாணம் ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது.
நோயாளிக்காக வாங்கிவந்த மருந்தை சுகதேகிக்கு பருக்கியதுபோல,வடகிழக்கு மக்களுக்காக கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமை ஏனைய 7 மாகாணங்களிலும் , ஆரம்பம் முதல் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது.கிழக்கிலும் தற்போது சரியாக உள்ளது. இவ்வதிகாரம் எப்போது கிடைக்கும் என வடமாகாண மக்கள் காத்திருக்கின்றனர்.
ஆன்று ஜேயார் ஜெயவர்தன அவர்கள்

Post a Comment