Header Ads



ரணில் விக்கிரமசிங்க மீது அஸ்வர் எம்.பி. சீறிப்பாய்கிறார்


அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் தலைவர்கள் தொழுவது மக்கத்துக்கா அல்லது மெதமுலனை க்கா என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியுள்ளதாக பத்திரிகை செய்திகள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் கூற்று இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முற்றிலும் முரணான கூற்று என்றும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவையின் உறுப்பினருமான ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.  ஐ. தே. க. தலைவரின் கூற்று தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

முஸ்லிம்கள் தொழுவது மக்காவுக்கும் அல்ல வேறொரு இடத்திற்கும் அல்ல முஸ்லிம்கள் தொழுவது எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா ஒருவனுக்கு மட்டுமே. இதுவே ஈமானின் அடிப்படைக் கொள்கையாகும். முஸ்லிம்களுடைய இந்த அடிப்படை கொள்கைக்கூட தெரியாத ஒருவர்தான் இந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்.

இஸ்லாத்தை இழிவு படுத்தும் வகையிலான ரணில் விக்கிரமசிங்கவின் இந்தக் கூற்றை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவர் பின்பற்றுகின்ற மார்க்கம் என்ன என்பதை தமக்கு புரியவில்லை என பெளத்தர்களும் ஏனையவர்களும் கேட்கின்றார்கள். எது எவ்வாறாயினும் இஸ்லாத்தை இழிவுபடுத்தி கூறுவதற்கு அவருக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

இதேபோன்று தான் முன்னைய காலங்களில் பெளத்த தர்மத்தை பற்றியும் சிங்கள வரலாற்றை பற்றியும் தவறாக உளறித் திரிந்ததன் மூலம் பெளத்த சிங்கள மக்களின் விமர்சனத்திற்கும் கோபத்திற்கும் உள்ளானார். வெளிநாடுகளுக்கு சென்று பலருடன் தமது விடுமுறையை உல்லாசமாக கழிப்பதே இவருடைய மார்க்கமாகும். ரணில் விக்ரமசிங்கவின் மேற்படி கூற்று மிகவும் பாரதூரமானது என்பதை முஸ்லிம்கள் நன்கு உணர வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் ஈராக் விடயத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ரணில் செயற்பட்டதன் மூலம் முஸ்லிம் விரோத சர்வதேச வல்லரசு தொட்டியில் எவ்வளவு தூரத்திற்கு தாளம் போட்டு ஆடுகின்றார் என்பதை முஸ்லிம்கள் மாத்திரமின்றி அனைவரும் புரிந்துள்ளனர். ஒத்திகை பார்ப்பதற்காகவும், ஒத்தளம் போடுவதற்காகவும் கொழும்பிலிருந்து மன்னாருக்கு இவருடன் சென்ற முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கூட இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் தொடர்பில் எடுத்துச் சொல்ல முடியாது போய்விட்டதா என்று முஸ்லிம்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அரசிலுள்ள முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பிக்களை பொறுத்தமட்டில் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகள் எழுந்த வேளையில் ஜனாதிபதி அவர்களுடனும், பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபருடனும் உடனுக்குடன் பேசி வருகின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனும் மிகவும் நெருக்கமான ஈடுபாடுகளைக் கொண்டு முஸ்லிம்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசி வருகின்றோம்.

ஒரு சம்பவம் நடந்தால் புகைப்படகாரர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் ஓடோடி சென்று கீழ் தரமான அரசியல் இலாபத்தை பெறுவதற்காக வேண்டி மோப்பமிட்டு திரிகின்ற ஐ. தே. க முஸ்லிம் அரசியல்வாதிகள் போலின்றி மிகவும் கடமை உணர்வுடனும் இஸ்லாமிய பற்றுறுதியுடனும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் அல்லும் பகலும் செயற்பட்டு வருகின்றோம் என்பதை தெளிவாக கூறவிரும்புகின்றோம்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைக்கு எதிராக கூற்றுக்களை வெளியிட்டு வரும் ஐ. தே. க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த நாட்டிலுள்ள எந்த ஒரு முஸ்லிமும் ஆதரவு வழங்கமாட்டார் என்று ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்தார். thinaharan

10 comments:

  1. Asver mp ippathan vai thirakka mudinthatha?

    ReplyDelete
  2. please dont give publicity to his news

    ReplyDelete
  3. அமைச்சரே!Cool!!!மிச்சம் ஆவேசப்பட வேண்டாம்.முஸ்லிம் பள்ளிவாயில்கள் ஒன்றும் தாக்கப்படவில்லை என்ற கருத்தை கொண்டவர் தானே நீங்கள்.

    so ,b relax, இதெல்லாம் தட்டிகேட்க நமது சீறிப் பாயும் சிங்கம் இருக்குறார்.(சகோ_அசாத் சாலி) அவர் தான் உண்மையான அரசியல்வாதி.
    அவருக்கு ALLAH, பரகத் செய்வானாக!!!

    ReplyDelete
  4. அஸ்வர் அவர்களே! இலங்கை அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பா.ம.உறுப்பினர்களின் நடவடிக்கைகளைப்பார்க்கும் போது அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களும் சந்தேகப்படும்போது, மாற்று மதத்திலுள்ள ரணில் சந்தேகப்படுவதில் எந்தத்தவறுமில்லை (இலங்கையிலுள்ள வெளிநாட்டுத்தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்த வேளை உங்களின் நடவடடிக்கையைப்பார்த்து அவர்களும் இதே சந்தேகம் கொண்டார்கள்தான் ஆனால் அவர்கள் அதை வெளியில் சொல்ல வில்லை). சும்மா அறிக்கை விடுவதை விட்டுவிட்டு உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளுங்கள். அப்போதுதான் மாற்று மதத்தவர்களுக்கு உங்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் நல்ல அபிப்பிராயம் வரும். உங்களைப்போன்ற பா.ம.உறுப்பினர்களினால்தான் இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் பிரச்சினை.

    ReplyDelete
  5. அடேங் கொய்யாலா ,இதெல்லாம் முஸ்லீம்கள் பார்த்துக்குவாங்க, நீங்க கவலைப்படாதீங்க ,உங்கள் கவலைக்கு நன்றி
    குனூத் ஓதக்குள்ளே ஆயுதம் அல்லாஹ்கிட்ட கேட்பீங்களா? என்று கேட்டபொழுதெல்லாம் உங்கட வாய்க்குள்ளே என்ன முட்டயும்ஸ் கொளுக்கட்டையும்ஸ் அடைச்சா இருந்தது .

    ReplyDelete
  6. அரசியல் இலாபத்திற்காக இருந்தாலும் பறவாயில்லை முஸ்லிம்களின் பிரச்சினைகள் சம்மந்தமாக ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கத்திடம் பேசியிருந்தார் அந்தவேளையில் இந்த இஸ்லாமியக்குடிமகன் எங்கிருந்தார்? ரணில் கேட்டது எங்களை ஒருபோதும் பாதிக்கவில்லை அவர் அப்படியொரு பாரதூரமான கேள்வியைக்கேட்கவில்லை அவருக்கு அவருடைய மார்க்கம் தெரியாமலிருக்கும்போது, அடிப்படை இஸ்லாம் கூட தெரியாமல் இருக்கலாம் அதனால்தான் அவர் அப்படிக்கேட்டிருக்கின்றார், அவருக்கு விளக்கத்துடன் பதிலை சொன்னால் இதுதான் உண்மையென்று புரிந்துகொள்வார்.

    முஸ்லிம்கள் ஒன்றும் நீங்கள் நினைக்குமளவிற்கு முட்டாள்கள் அல்ல ரணில் எதிர்கட்சி என்பதற்காகவும், உங்கள் அரசியல் இலாபத்திற்காகவும் அவரைகூறுவது மிகவும் அழகாகவும் வெளிப்படையாகவும் எமக்கு புரிகின்றது, எனவே, முஸ்லிம்களின் விடயங்களை முஸ்லிம்கள் பார்த்துக்கொள்வார்கள் உங்களைப்போன்ற ரெண்டும்கெட்டான்களின் உதவி ஒருபோதும் முஸ்லிம்களுக்கு தேவைப்படுமளவிற்கு இறைவன் வைத்துவிடக்கூடாது.

    இன்னுமொருவிடயம்: கடைசியாக நடந்த கூட்டமொன்று உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? முஸ்லிம்கள் சார்பாக ஜனாதிபதியை சந்திக்கவந்த குளுக்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பின்பக்கமிருந்து ஒவ்வொருவிடயத்திற்கும் அது முடிந்துவிட்டது! அதுமுடிந்துவிட்டது!! என்று கூச்சலிட்டு அவர்களை நிம்மதியாகப்பேசக்கூடவிடாமல் தடுத்தது யாரென்று நினைவிருக்கின்றதா? அது தாங்களின் செயல்பாடில்லையா? அதை எந்தக்கணக்கில் சேர்ப்பது? இதைவிட ரணில்கேட்டது எங்களுக்கு ஒன்றும் பெரியவிடயமாகத்தெரியவில்லை.

    நீங்கள் அசையும் ஒவ்வொரு அசைவும் முஸ்லிம்களுக்கெதிராகவும், உங்கள் அரசியல் இலாபத்திற்காகவும் மட்டும்தான் உங்கள் இலாபத்திற்காக எமது பள்ளிவாசல்களை உடைத்தார்கள், இந்த உலகமே ஒருபக்கம் நின்று பள்ளிகள் உடைக்கப்பட்டன என்று சொன்னபோது நீங்கள் மட்டும் உடைக்கப்படவில்லையென்று சொன்னீர்கள், இதுதான் உங்கள் ஈமானும் இஸ்லாமும் நீங்கள் முஸ்லிம்களுக்கு குரல்கொடுக்கும் லட்சணமும்.
    ஒன்றும் வேண்டாம் உம்மிடம் ஒரேயொருகேள்வி. அல்லாஹ்வின் பெயரை அசிங்கமான மிருகமொன்றின்மேல்வரைந்து ஓலமிட்டதே பொதுபலசேன அப்போது எங்குபோனது இந்த ரோசமும் வீராப்பும்? இதுபோன்ற எத்தனையோவிடயம் நடந்தது ஒவ்வொன்றாக விபரிக்க நேரமில்லை, அப்படியான் சந்தர்ப்பத்தில் உங்கள் வாய்க்குள் என்ன கொளக்கொட்டயா வைத்திருந்தீர்கள், அந்த நேரம் முஸ்லிம்களுக்காகக் குரல்கொடுக்காத நீங்கள் இப்போது இப்படியொரு சர்வசாதரணவிடயமொன்றிற்கு கிழம்பியடிபதற்கு ஒரு அவசியமில்லை, அது அவசியமானதென்றாலும் உம்மைப்போன்றவர்கள்கள் பேசினால் எமது மயிருக்கும் நாம் கணக்கெடுக்கமாட்டோம். ஆக புத்திசாலியென்று நினைத்துக்கொண்டு, சும்மா மொக்க அறிவிப்புக்கொடுத்து முஸ்லிமகளுக்கு நல்லபிள்ளைப்பட்டம் எடுக்க நினைக்கவேண்டாம். அது ரொம்ப அசிங்கமா இருக்கு பார்ப்பதற்கு. ஆகவே சூ. வா. பொ. கொண்டு வழமைபோல குப்பைகொட்டி பிழைக்கவும்.

    ReplyDelete
  7. The days will tell the answer to all.

    ReplyDelete
  8. அல்லாஹ்வின் பெயரை அசிங்கமானதொரு மிருகத்தின் உடம்பில் எழுதி அசிங்கப்படுத்தியபோது உங்களுக்கு வராத ரோசமும் கோபமும் இப்போது வரக்காராணம் என்ன? அரசியலா? உங்களால் பேசமுடியாதவர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களும் அல்லாஹ்வை எப்படிச்சித்தரித்தாலும் பரவாயில்லை, குர் ஆனை பிழையாக சித்தரித்தாலும் பரவாயில்லை, நமது அடிப்படைகளைக்குறைகூறினாலும் பரவாயில்லை அது உங்களைப்பொறுத்தமட்டில் நல்லது கேட்டுக்கொண்டிருக்கலாம். அதேவேளை இதுபோன்ற சின்னச்சின்னவிடயங்கள் உங்களுக்கு வன்மையாக்கண்டிக்கும் அளவிற்கு பாரியதாக உள்ளதா? என்ன முஸ்லிம்கள் என்றால் உங்களைப்போல் பதவிக்காக பீயைத்தின்னுமளவிற்கா உள்ளார்களா. இதுபோன்றவிடயங்கள் உங்களுக்குப்பிடிக்கவில்லையென்றால் அதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து பதில் கொடுக்கவும். தயவு செய்து அதை என்கள் மார்க்கத்துடன் கலந்து அசிங்கப்படுத்தவேண்டாம்..

    ReplyDelete
  9. mr.asver! ippediyane videyenkelai muslimkel partthuk kolvarkel neenkel unkede velaiyai partthuk kondirunthale pothum.

    ReplyDelete
  10. அஸ்வர் பக்க்ஷ அவர்களே
    இதே செய்தியை உங்கள் தலைவர்கள் சொல்லி இருந்தால்
    என்ன அறிக்கை விடுவீர்கள் ? அதாவது தற்போதைய தலைவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.