Header Ads



தமிழ் இன துரோகிகள் சிலர் இன்று முஸ்லிம்களுக்கு துரோகம்செய்ய நினைக்கின்றனர்



(அப்துல் அஸீஸ்)

இப்பிரதேசத்ததில் தமிழர்களுக்கு துரோகம் செய்து தமிழர்களின் குரலை நசுக்கிய தமிழ் இன துரோகிகள் சிலர் இன்று முஸ்லிம்களுக்கு துரோகம்செய்ய நினைக்கின்றனர். இந்த தமிழ் மக்களுக்குள் இருக்கும் தமிழ் இன துரோகிகள் தமிழ், முஸ்லிம் உறவினை சீர்குலைக்க எடுக்கும் முயற்சிகளுக்கு கல்முனை வாழ் தமிழ் மக்கள் துணைபோக மாட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகின்றேன். என கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் கூறினார்.

 மாநகர முதல்வர் சிராஸ்மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற, கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்துகொண்டு பொதுபலசேன அமைப்பின் அலுவலகம் கல்முனை பிரதேசத்தில் அமையப்பெற இருப்பதாக கூறப்படும் விடயம்தொடர்பாக மாநகரசபை உறுப்பினர் எம்.ஐ.எம். பிர்தௌஸ் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

பொதுபலசேன என்ற அமைப்பை தடைசெய்யவேண்டும் எனக்கோரி கடந்த 2013.03.27ஆம் திகதி கல்முனை மாநகரசபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இதனுடைய அலுவலகம் ஒன்று எதிர்காலத்தில் கல்முனைப் பிரதேசத்தில் அமைவது தொடர்பாக எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பொதுபலசேன அமைப்பின் பின்னால் சர்வதேச சக்திகளான நோர்வே, மொசாட் போன்றவைகள் முஸ்லிம்களை பிளவுபடுத்த கங்கணம்கட்டிக்கொண்டிருக்கின்றார்கள். 

கல்முனை மாநகரசபை பொதுபலசேன அமைப்பை தடைசெய்ததனைப்போல், இலங்கையிலுள்ள சிறுபான்மை சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உள்ளுராட்சி அமைப்புக்கலும் இதனைத்தடை செய்வதற்கான பிரேரணையை கொண்டுவர வேண்டும் எனககூறினார்.

No comments

Powered by Blogger.