கிரிக்கெட்டும் சூதாட்டமும்...!

ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர். தற்போது, 5 நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம் தீவிர விசாரணையின் நடக்கிறது.
கிரிக்கெட்டில் சூதாட்டம் நடப்பது புதிதல்ல. இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான இதில், பல ஆண்டுகளாக சூதாட்டம் நடந்து வருகிறது.
"சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மை தான். இது மிகப்பெரிய தவறு,'' என, ராஜஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் அன்கித் சவான் ஒப்புக் கொண்டுள்ளார். ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர்.
தற்போது, 5 நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம் தீவிர விசாரணையின் நடக்கிறது. இதில் சவான் மட்டும் செய்த தவறை ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து வெளியான செய்தியில்," "பிக்சிங்கிற்கு' முதலில் சவான் ஒத்துக்கொள்ள மறுத்தார். ஆனால், புக்கிகளின் தொடர்ந்த தூண்டுதலாம், வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டுள்ளார். இது தான் செய்த மிகப்பெரிய தவறு என்று சவான் தெரிவித்தார்,' என, கூறப்பட்டுள்ளது.
இதுவும் "பிக்சிங்கா':
தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் வீரர்களான ஸ்ரீசாந்த், சவான், சண்டிலா ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடி கணக்கில் பணமும் "பிக்சிங்' ஈடுபட்ட பல தரகர்களும் தொடர்ந்து போலீஸ் தொடர்ந்து கைது செய்து கொண்டே இருக்கின்றனர். கடந்த 2008ல் பிரிமியர் கிரிக்கெட் தொடர் துவங்கிய நாள் முதல் "பிக்சிங்' என்பது தொடர்ந்து கொண்டே உள்ளன. இந்த ஆண்டு பிரிமியர் கிரிக்கெட் தொடரில் நடந்த, சில சம்பவங்களும் "பிக்சிங்' முறையில் நடந்தாத என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
சில சம்பவங்கள்: ஆர்.பி.சிங் "நோ பால்': கடந்த ஏப். 13ல் சென்னை, பெங்களூரு அணிகள் மோதிய 16வது லீக் போட்டியில், சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ஆர்.பி.சிங் முதல் இரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் ஜடேஜா. பின் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக கடைசி பந்தை ஆர்.பி.சிங் "நோ பாலாக' வீச சென்னை அணி ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற்றது.
போலார்டு "ஹாட்ரிக்' கோட்டை:
மே 5ல் நடந்த 49வது லீக் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதின. இதில் 140 ரன்கள் என்ற எளிய இலக்கை சென்னை அணி துரத்தியது. இதில் மும்பை வீரர் ஜான்சன் வீசிய போட்டியின் முதல் ஓவரின் 4,5,6வது பந்தில் மைக்கேல் ஹசி கொடுத்த மூன்று கேட்சையும் போலார்டு "ஹாட்ரிக்' கோட்டைவிட்டார். பின் ரெய்னா கொடுத்த "கேட்ச்சை ' போலார்டு அபாரமாக பிடித்தார். இப்போட்டியில் மும்பை அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அஷ்வின் ஆச்சரியம்: இதே போட்டியில் சென்னை அணி தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் கேப்டன் தோனி களமிறங்கும் இடத்தில் அஷ்வின் களமிறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நம்பிக்கையுடன் களமிறங்கிய அஷ்வின் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
வள்ளல் டேவிட் ஹசி:
41வது லீக் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் மும்பை அணி முதலில் "பேட்டிங்' செய்தது. பஞ்சாப் வீரர் சாவ்லாவுக்கு 2 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் தானாக முன்வந்த டேவிட் ஹசி, கடைசி ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி உட்பட மொத்தம் 27 ரன்களை வாரிவழங்கினார்.
அம்பயர்கள் சந்தேகம்: அம்பயர்களின் செயல்பாடும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பந்து பேட்டில் படாமல் செல்வதற்கு விரைவாக "அவுட்' கொடுப்பது, எல்.பி.டபிள்யு., முறையில் தவறான முடிவுகள் போன்ற விஷயங்களும் அம்பர்கள் "பிக்சிங்கில்' ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. விரைவில் இது போன்ற செயல்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீசாந்த், சண்டிலாவுக்கு பெண்கள் சப்ளை:
புதுடில்லி: "ஸ்பாட்-பிக்சிங்கில்' பிடிபட்ட ஸ்ரீசாந்த், சண்டிலாவுக்கு புக்கிகள் பெண்களை சப்ளை செய்த செயல் அம்பலமாகியுள்ளது. மற்றொரு வீரர் அன்கித் சவான், தவறு செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, அன்கித் சவான் ஆகிய மூவரும் "ஸ்பாட்-பிக்சிங்கில்' ஈடுபட்டு, டில்லி போலீசிடம் பிடிபட்டனர்.
தற்போது, 5 நாள் போலீஸ் காவலில் உள்ள இவர்களிடம் தீவிர விசாரணையின் நடக்கிறது. இதில் சவான் மட்டும் செய்த தவறை ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து வெளியான செய்தியில்," "பிக்சிங்கிற்கு' முதலில் சவான் ஒத்துக்கொள்ள மறுத்தார். ஆனால், புக்கிகளின் தொடர்ந்த தூண்டுதலாம், வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டுள்ளார். இது தான் செய்த மிகப்பெரிய தவறு என்று சவான் தெரிவித்தார்,' என, கூறப்பட்டுள்ளது. ஸ்ரீசாந்த் விசாரணை அதிகாரிகளிடம் முதலில் எதுவும் பேச மறுத்தார். பின், போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளித்ததாக தெரிகிறது. தனது உறவினர் ஜிஜு ஜனார்தனன் தான், ஆசை காட்டியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஸ்ரீசாந்த், சண்டிலா ஆகிய இருவரும், குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.
பெண்கள் சப்ளை: இதனிடையே, "பிக்சிங்' வீரர்களுக்கு புக்கிகள் பெண்களை சப்ளை செய்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட புக்கிகள் மனன், சந்த் இருவரது தொலைபேசி உரையாடலை வைத்துப் பார்க்கும் போது, ஸ்ரீசாந்த், சண்டிலாவுக்கு மூன்று முறை பெண்களை அனுப்பியது தெரியவந்துள்ளது. மும்பையில் ஸ்ரீசாந்த், சண்டிலா இருவரும் கைது செய்யப்பட்ட போது கூட, பெண்களுடன் தான் இருந்தானராம். ஆனால், இவர்களுக்கு "பிக்சிங்கில்' தொடர்பு இல்லை என்பதால், சம்பந்தப்பட்ட பெண்கள் மீது வழக்குப் பதியாமல் போலீசார் விட்டுவிட்டனர்.
அடுத்த மாதம் திருமணம்: அங்கித் சவான் சகோதரர் ஒருவர் கூறுகையில்,"" நாங்கள் சிறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். சவானுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவுள்ளது. இந்நிலையில் சவான் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை,'' என்றார்.
அவசர கூட்டம்: "பிக்சிங்' சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) அவசர கூட்டம், சென்னையில் நாளை நடக்கவுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்," தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்தும், இதன் விளைவுகள், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் மீது வழக்குப்பதிய ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் தெரிகிறது.
தனி சிறையில் ஸ்ரீசாந்த்:
சூதாட்ட சம்பவத்தில் கைதான ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர், தற்போது டில்லி போலீஸ் காவலில் உள்ளனர். இதில் ஸ்ரீசாந்த்துக்கு தனி சிறை வழங்கப்பட்டுள்ளது. இவர் மற்ற வீரர்களுடன் பேசமுடியாத நிலையில் உள்ளார்.
ரஞ்சி பணம் பறிமுதல்: போலீசாரிடம் சிக்கியுள்ள அங்கித் சவான், மும்பை அணிக்காக 2012-2013 சீசன் ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்றார். கோப்பை வென்ற மும்பை அணிக்கு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்.சி.ஏ.,) சார்பில் ரூ. 2 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இது வரும் மே 29 ம் தேதி வழங்கப்படவுள்ளது. இப்போது சவான் "பிக்சிங்கில்' சிக்கியதால், இவருக்கான பரிசுப் பணத்தை திரும்பப்பெற எம்.சி.ஏ., முடிவு செய்துள்ளது.
புக்கியாக மாறிய கிரிக்கெட் வீரர்: மும்பை: சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங், கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறியது இப்போது தெரிந்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் அமித் சிங், 31. வேகப்பந்து வீச்சாளரான இவர், குஜராத் அணிக்காக முதல் தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2009 முதல் ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்தார். மொத்தம் 23 பிரிமியர் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2012 தொடருக்குப் பின், ராஜஸ்தான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. மாறாக, அப்படியே கிரிக்கெட் வீரர்களை வளைத்துப் போடும் புக்கியாக மாறிய விஷயம் இப்போது தெரிந்துள்ளது. இவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னதாக, போலீசார் அமித் சிங்கை பிடித்துச் சென்றனர். ஆனால், நேற்று முன்தினம் தான் கைது செய்ததாக முறைப்படி அறிவித்தனர்.
பி.சி.சி.ஐ., "சஸ்பெண்ட்': அமித் சிங் குறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்ட அறிக்கையில்," குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் அமித் சிங், கிரிக்கெட் வீரராக பதிவு செய்துள்ளார். இவரை போலீஸ் கைது செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடப்பதால், "சஸ்பெண்ட்' செய்யப்படுகிறார்,' என, தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் மாணவர்கள்:
பிரிமியர் கிரிக்கெட் தொடரில், டில்லி மாணவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது, பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் சூதாட்ட மேகம் சூழ்ந்துள்ளது. இதனால் பிரிமியர் கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, பிரிமியர் கிரிக்கெட் சூதாட்டத்தில், பள்ளி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதில் இடைத்தரகர்களாக செயல்படுவதும் பள்ளி மாணவர்களாக உள்ளனர். 11, 12வது படிக்கும், கிரிக்கெட் விளையாடுபவர்களை இலக்கு வைத்து செயல்படுகின்றனர். மாணவர்களிடம் முதலில் ஆசை வார்த்தை கூறி, புக்கிகளின் வலையில் விழ வைக்கின்றனர். மாலை நேரத்தில் பள்ளிக்கு வரும் புக்கிகள், கிரிக்கெட் மைதானத்திலுள்ள மாணவர்களை சந்திக்கின்றனர். "பிக்சிங்கில்' ஈடுபட்ட மாணவன் ஒருவன் கூறுகையில்,"" பள்ளியில் வந்து, மனதை மயக்கும் வகையில் பேசி, அழைத்து சென்றனர். ரூ. 10 ஆயிரம் வரை இழந்துள்ளேன். நல்லவேளையாக எனது பெற்றோருக்கு இது தெரியவில்லை,'' என்றார்.
வீட்டில் திருட்டு: தெற்கு டில்லியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் நண்பர் ஒருவர் கூறியது: பிரிமியர் அணிகளின் மீது பணம் கட்டினால், இரண்டு மடங்கு அதிகமாக கிடைக்கும் என்று இடைத்தரகர் தெரிவித்தார். இதற்காக எனது நண்பன், தனது "பாக்கெட்' பணம் ரூ. 3000 த்தை கொண்டு வந்தார். ஆனால், ரூ. 10 ஆயிரம் வேண்டும் என, புக்கிகள் தெரிவித்தனர். இதனால், தனது தந்தையின் பணத்தையே திருடி, ஐந்து முறை சூதாட்டத்தில் ஈடுபட்டான். கடைசியில் பிடிபட்டதால், பள்ளியில் இருந்து விலக்கி, முசவுரியில் உள்ள "ஹாஸ்டலில்' சென்று சேர்த்துவிட்டார். இவ்வாறு அந்த மாணவன் கூறினார்.
"பைக்' போச்சு: மற்றொரு மாணவர் கூறுகையில்,"" இதுவரை சூதாட்டத்தில் நான் ரூ. 50 ஆயிரம் வரை இழந்து விட்டேன். புக்கிகளிடம் வைத்த கடனை அடைக்க, எனது புதியதாக வாங்கிய "பைக்கை' விற்றுவிட்டேன். எனது தந்தையிடம் "பைக்' தொலைந்து விட்டதாக கூறி தப்பித்துவிட்டேன்,'' என்றார்.
போலீசார் மழுப்பல்: "கிரைம்' பிரிவு கூடுதல் அதிகாரி ரவிந்திர யாதவ் கூறுகையில்,"" பள்ளி மாணவர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து, இதுவரை எங்களுக்கு முறைப்படியான புகார் எதுவும் வரவில்லை. சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி, பள்ளிப்பகுதிகளில் சுற்றித் திரிந்த சில புக்கிகளை கைது செய்துள்ளோம்,'' என்றார்.
Post a Comment