Header Ads



அட்டாளைச்சேனையில் ஆங்கில தினப் போட்டிகள் (படங்கள்)



(எஸ். எல். மன்சூர்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனைக் கோட்டத்திற்கான ஆங்கில தினப்போட்டிகள் 2013.06.09ஆந்திகதி அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் நடைபெற்றது. அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள 24 பாடசாலைகளில் பாடசாலை மட்டத்தில் இடம்பெற்ற ஆங்கில போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான நிகழ்வுகள் கோட்ட மட்டத்தில் நடைபெற்றது. இதில் அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளின் மாணவ மாணவிகள் பங்குபற்றினர். எழுத்து, சொல்வதெழுதுதல், நாடகம், பேச்சு போன்ற நிகழ்வுகளில் திறமை காட்டி முதன்மை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். எம்.ஏ.சி. கஸ்ஸாலி, அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஆங்கிலப்பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம். அபுல்ஹஸன், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம்.இப்றாகீம் ஆகியோருடன் பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

(இவற்றுக்கான படங்களில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.அபுல்ஹஸன், கோட்டக்கல்வியதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி, ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம்.இப்பாறீம் ஆகியோர் சான்றிதழ் வழங்குவதையும் படங்களில் காணலாம்.)




No comments

Powered by Blogger.