Header Ads



மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை


(எம்.ரீ.எம்.பாரிஸ்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப்பிரிவின் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை அண்மைக்காலமாக நிலவி வருகின்றது.

இப்பாடசாலையில் 2015ம் ஆண்டு  உயர் தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள 33 மாணவர்கள் புவியியல் கற்கையினை தேர்வு செய்திருக்கின்றனர்.  இந்நிலையில், குறித்த பாடசாலையில் புவியியல் பாடத்திற்கான ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை. 

இது விடயத்தில் கவனம் செலுத்திய குறித்து பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், மாணவர்கள், குறித்த பாடத்தினை தெரிவு செய்த உயர்தர மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அடங்கிய குழுவினர் இன்று 31.05.2013 வெள்ளிக்கிழமை ஏறாவூர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம் செய்திருந்திருந்தனர்.

இச்சந்திப்பின் போது, பாடசாலையில் நிலவி வரும் புவியியல் பாட ஆசிரியரின் வெற்றிடத்தினை நிவர்த்தி செய்து தருமாறு வலயக்கல்விப்பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர். 

இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட வலயக்கல்விப்பணிப்பாளர் வெகு விரைவில் இத்தேவையினை பூர்த்தி செய்து தருவதாகவும் அதற்கான முயற்சியினை பெற்றோர்கள், அதிபர் முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் KBS. ஹமீட், ஓட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி  எம்.சுபைர், பழைய மாணவ சங்கத்தின் உப செயலாளர் எம்.ரீ.எம்.பாரீஸ், பெற்றோர்கள், மாணவர்கள் வலயக்கல்வி அலுவலக சந்திப்பின் போது கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.