'அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்'
கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடும் படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. இது பற்றி உலமா கவுன்சில் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் சமூகத்துக்கான குரலாக ஒலித்த சகோதரர் ஆஸாத் சாலி பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை அதிர்ச்சியை தருகிறது. இது விடயம் அனைத்து முஸ்லிம்களையும் பாரிய கவலைக்குள்ளாக்கியள்ளது. நிச்சயம் ஆஸாத் சாலி நிரபராதி என விடுதலை செய்யப்படுவார் என்பதில் எமக்கு நிறையவே நம்பிக்கை உண்டு. ஆயினும் அவரது விடுதலைக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து துஆ பிரர்த்தனையில் ஈடு படும் படி அகில இலங்கை உலமா கவுன்சில் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறது.

Post a Comment