சவூதி அரேபியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைக்க பிரச்சாரம்
பெண்கள் மீதான உள்ளகத் தாக்குதலுக்கெதிராக பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவின் மன்னர் காலித் அறக்கட்டளை பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. அதன் ஓரங்கமாக மேற்கண்ட (காயம்பட்ட கண்ணுடன் முகத்திரை அணிந்த பெண்) படம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் மீதான வாசகம் : 'எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட முடியாது. பெண்மீதான உள்ளகத் தாக்குதல்களை இணைந்து எதிர்ப்போம் என்று குறிப்பிடுகிறது.
சவூதி அரேபியாவின் நாளிதழ்களிலும் இப்படம் வெளியாகியிருக்கிறது. சவூதி அரேபியாவின் தேசிய மனித உரிமை ஆணையக் குறிப்புபடி, 2004 லிருந்து 2011 வரையிலான காலக்கட்டத்தில் 2293 உள்ளகத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்றும், அவற்றுள் 1998 தாக்குதல்கள் பெண்கள் மீதானவை என்றும் குறிப்பிடுகிறது.
பெண்களுக்கு வீட்டில் துன்பம் விளைவிப்பவர்களுள் 43 விழுக்காட்டினர் கணவர்களே என்றும், தந்தையர் 30.9 விழுக்காட்டினர், சகோதரர்கள் 11.2 சதவீதம், முன்னாள் கணவர்கள் 7.8 சதம், இறுதியாக புத்திரர்கள் 3.7 சதவிகிதம் என்றும் புள்ளிவிவரம் கூறுகிறது. inneram
நான் இஸ்லாத்துக்கு வர நினைப்பதுண்டு ....ஆனால் எங்காவது முஸ்லிம்கள் நிமதியாக வாழ்கிறார்களா அல்லது எங்காவது அமைதி நிலவுகிறதா என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கிறது .....ஏறத்தாழ 51 இஸ்லாமிய குடியரசுகள் .....முஸ்லிம்கள் சனத்தொகை எங்கு பார்த்தாலும் .....வன்முறை, உட்சமய முரண்பாடுகள் , கொள்கைக்காக கொலை செய்தல், மக்களுக்கு மத்தியில் தற்கொலை தாக்குதல் செய்து தமது மக்களையே கொள்ளுவது பெண்கள் மீது கட்டுமிரண்டிதனமாக வன்முறை ஏவுவது ,,,,,இப்படி பிரச்சனைகளோ ஏராளம் ....இப்போது ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளில் பணிப்பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வன்முறை .......எங்காவது நல்லது நடந்தால் அதைவைத்து வாதாடி நான் இஸ்லாத்துக்கு வந்த காரணத்தை நிலை நிருததலாம் .....ஆனால் முடியாது போலிருக்கே
ReplyDelete