Header Ads



விடுதலைப் புலி உறுப்பினர் உள்ளிட்ட 5 கைதிகள் தப்பியோட்டம்

மாத்தறையில் வெசாக் வலயத்தில் பணியாற்றுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் உள்ளிட்ட 5 கைதிகள் தப்பியோடிவிட்டதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு கூறியுள்ளது. 

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு ஏற்பாடு செய்த வெசாக் கொண்டாட்டங்களுக்கான அலங்காரப் பணிகளுக்கு பூசா, வெலிக்கடை, குருவிட்ட சிறைகளில் இருந்து கைதிகள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். 

அவர்களில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான பாலசுப்ரமணியம் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட 5 கைதிகளே தப்பியோடியுள்ளனர். 

தப்பியோடிய ஜெகதீஸ்வரன் நீதிமன்றத்தினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் ஒரு ஆண்டு சிறைவாசத்தையே அனுபவித்துள்ளார்.  தப்பியோயடிவர்களை பிடிக்க காவல்துறையின் உதவியுடன் பாரிய தேடுதல் நடத்தப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.