ஆங்கில ஆசிரியர் பிஸ்ருல் ஹாபியின் 25 வருட கால சேவையை பாராட்டி கௌரவம்
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
பிரபல ஆங்கில ஆசிரியர் கலாநிதி பி.எம்.பிஸ்ருல் ஹாபியின் 25 வருட கால சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்பு-12, வாழைத்தோட்டம் அல்ஹிக்மா கல்லூரியில் அதிபர் ஏ.எம்.எம்.நாளிர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
யுனிக் நிறுவுனத்தின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த பாராட்டு நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனீஸ் கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தினார்.
கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், புத்திஜீவிகள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கலாநிதி பிஸ்ருல் ஹாபிஸூக்கு 15 இலட்சம் ருபா பெறுமதியான தங்கம் ஞாபகர்த்தமாக இக்கௌரவிப்பு நிகழ்வில் வழங்கப்பட்டதுடன் மேலும் பல ஞாபக சின்னங்களும் வழங்கப்பட்டது.





Post a Comment