தங்க சுரங்கம் இடிந்து விழுந்து, 100 பேர் மரணம்
ஆப்பிரிக்க நாடான சூடானின் தர்பர் பகுதியில் இருக்கும் தங்கச் சுரங்கங்கள்தான் அந்த நாட்டின் முக்கிய வருமானமாக விளங்குகிறது. இங்கு செயல்பட்ட ஜபெல் அமிர் சுரங்கம் கடந்த திங்களன்று இடிந்து விழுந்தது. இதில் 40 மீட்டர் ஆழத்தில் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மாட்டிக்கொண்டனர்.
இந்த விபத்தில் மீட்புபணியில் ஈடுபட்டவர்கள் 9 பேரும் சிக்கிக்கொண்டனர். மேலும் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் மீட்புப்படையினரின் முயற்சிகள் பலனிக்கவில்லை.
இதனால் நவீன கருவிகளை பயன்படுத்தாமல், பழங்காலக் கருவிகளைக் கொண்டு மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவும் பலனிக்காமல் போனதால் மீட்புப்பணியாளர் உள்பட 100 பேரை மீட்க முடியாமல் போய்விட்டது. இதனால் அவர்கள் அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டு மீட்புப்பணிகள் கைவிடப்பட்டன.

Post a Comment