Header Ads



பேராதனைப் பல்கலைக்கழக 1981ம் ஆண்டு தமிழ்மொழி மாணவர்களது ஒன்றுகூடல்


(J.M.Hafeez)

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1981ம் ஆண்டு தமிழ்மொழி மூலம் கலைப்பீடத்திற்குத் தெரிவான மாணவர்களது ஒன்று கூடல் 32 வருடங்களின் பின் இன்று பேரன் பேத்திகளுடன் விமரிசையாக இடம் பெற்றது.(25.5.2013) பேராதனைப் பல்களைக் கழக புவிசரதவியல் கேட்போர் கூடத்தில் இது இடம் பெற்றது.

பேராதனைப் பல்கiலைகழகத்தில் ஒன்றாக இருந்த அவர்கள் பல்வேறு உயர் பதவிகளை வகித்த நிலையிலும் தமது பிள்ளைகள் கூட அதி உயர் கல்வித் தகைமைகளைப்  பெற்று அரசு மற்றும்; தனியார் துறைகளில் தொழில் புரிவது பற்றி அங்கு தம்மைப் பற்றி சுய விமரிசனம் செய்தனர். அவ்வாறு சுய விமரிசனம் செய்தவர்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்கும் போது கடந்த 32 வருடங்களில் அவர்களால் மேற் கொள்ளப்பட்ட சமூக மாற்றம் எம்மைப் புள்ளரிக்க வைத்தது.

இதில் அதிகளவில் முஸ்லிம் பெண்கள் பங்கெடுத்திருந்தனர். அவர்கள் தமது அன்றாட வீட்டுப் பணிகளுக்கு அப்பால் சென்று இவ்வாறு தமது குழந்தைகளை நல்வழிப்படுதியுள்ளமை பாராட்டப் படவேண்டியது என்று பலர் தெரிவித்தனர். தமிழ் பெண்களும்  மற்றும் கணக்காளர் வங்கி முகாமையாளர், கல்விப் பணிப்பாளர்கள், அரச திணைக்கள வளவாளர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.




No comments

Powered by Blogger.