சவூதி அரேபியாவில் பலத்த மழை - 13 பேர் மரணம்
சவுதி அரேபியாவில் பெய்த பலத்த மழையால், 13 பேர் பலியாகியுள்ளனர். பாலைவன பகுதியான, சவுதி அரேபியாவில் பெரிய அளவுக்கு மழையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், கடந்த, நான்கு நாட்களாக, பெய்த பலத்த மழையால், தலைநகர் ரியாத், பாகா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மழை தண்ணீர் வெளியேறும் வசதி இல்லாத காரணத்தால், பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 13 பேர் பலியாகியுள்ளனர். "மக்கள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்' என, சவுதி அரசு எச்சரித்துள்ளது. "25 ஆண்டுகளில் இது போன்ற மழையை கண்டதில்லை' என, அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment