சுரங்க ரெயில் நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுள் முழுவதும் இலவச ரெயில் பயணம்
இலவச பயணங்கள் எப்போதுமே சந்தோஷத்தை அளிக்கக்கூடியவை. அந்தவகையில் ஒரு குழந்தை ரெயில் நிலையத்தில் பிறந்ததால், அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரெயில் பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்ஸிகோ நாட்டில் உள்ள மெக்ஸிகன் சிட்டி நகரத்தில் செவ்வாய் அன்று 22 வயதுடைய இளம்பெண் ஒருவர், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல சுரங்க ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார். ரெயிலில் ஏறுவதற்கு முன்னரே அவருக்குப் பிரசவ வலி எடுத்துள்ளது.
அங்கிருந்த ரெயில் நிலைய ஊழியர்களும், காவல்துறையினரும், மருத்துவ உதவியாளர்களும் அவருக்குத் துணை புரிய, ரயில் நிலைய நடைபாதையிலேயே ஒரு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதையடுத்து, அந்நகரத்தின் மேயர் மிக்யுல் ஏஞ்செல் மன்செரா அந்த குழந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், தன் வாழ்நாள் முழுவதும் அக்குழந்தை இலவசமாக சுரங்க ரயிலில் பயணம் செய்யலாம் என்று இணையதளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

Post a Comment