அகில இலங்கை சோனக சங்கத்தின் 100 ஆவது ஆண்டு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
அகில இலங்கை சோனக சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவை இவ்வருடம் கொண்டாடு முகமாக சங்கத்தின் நிறைவேற்று குழுக் கூட்டம் இன்று (12) ஒஸ்ரின் பிளேசில் உள்ள இணை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பஸ்லி நிசார் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தெல்தோட்டை பல்லேகம உடபிட்டிய அல்-ஹூஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரத்தில் கலைப்பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவி முஹமட் யூசுப் பரீட் பாத்திமா பஸ்னாவுக்கு அகில இலங்கை சோனக சங்கத்தினால் மடிக் கணனி ஒன்ற அன்பளிப்பாக வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.
மேற்படிச் சங்கத்தின சங்கத்தினூடாக உடபிட்டிய அல்-ஹூஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு கடந்த வருடம் ஒரு தொகுதி கணனிகள் வழங்கப்பட்டபோது மேற்படிப் பாடசாலையில் உள்ள மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திபெற்றால் அம்மாணவர்களுக்கு மடிக் கணனிகள் வழங்கப்படும் என சங்கத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பிரகாரம் மேற்படி மாணவி நல்ல பெறுபேற்றை பெற்றுக் கொடுத்தால் அவருக்கு சங்கம் உறுதியளித்தவாறு மடிக் கணனியை அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வில் சங்கத்தின் செயலாளர் றிப்கி சலீம், உதவிச் செயலாளர் கில்மி, அல்-ஹூஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஜி. நயீமுல்லா உட்பட சங்கத்தின் மாவட்ட கிளைகளின் உறுப்பினர்களும், கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


அகில இலங்கை சே◌ானகர் சங்கம் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இருக்கும் கிராமங்களுக்கு மட்டும் அதன் பொதுப் பணிகளை சுறுக்கிக் கொண்டுள்ளமை கவளைக் குறியது..!
ReplyDeleteஇதே தெல்தோட்டை பிரதேசத்தில் ஏனைய கிராமங்களிலும் சாதரன தர மற்றும் உயர் தரங்களில் திரமையாக சித்தியடைந்த பல மாணவர்கள் இருக்கிரார்கள் என்பதை ஒரு முறை அகில இலங்கை சே◌ானகர் சங்கத்துக்கு சுட்டிக்காட்டுகிறேன்.