அலாரம் ஒலித்ததாலும் அச்சப்படும் அமெரிக்கர்கள்..!
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று திடீரென அலாரம் ஒலித்ததால், மேற்கு பகுதியில் இருந்து நிருபர்கள், கேமராமேன்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகை உள்ளது. இங்கு, அதிபர் மாளிகை அதிகாரிகள், நிருபர்கள், கேமராமேன்களுக்கு நிரந்தரமாக தங்குவதற்கு தனி பிரிவு உள்ளது. இந்த பகுதியில் இருந்து நேற்று காலை திடீரென அலாரம் ஒலித்தது. தீப்பிடித்தால் எச்சரிக்கையும் கருவியில் இருந்து அலாரம் ஒலித்ததால், வெள்ளை மாளிகை அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக எல்லா பகுதிகளிலும் ஆய்வு செய்தனர். மேற்கு பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்து உடனடியாக அதை வெளியேற்றினர். மின் இணைப்பு நிறுத்தப்பட்டது. நிருபர்கள், கேமராமேன்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மின் கசிவால் புகை ஏற்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் அதிபர் ஒபாமா குடும்பத்தினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் உடனடியாக சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹி... ஹி... ஹி...
ReplyDeleteஉலக பொலிஸ்காரன்; உலகின் பெரிய வல்லரசு என்று கூறிக்கிட்டு இருக்கும் இவர்கள், சதா நிம்மதியில்லாமல் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்கின்றனர்.
அமெரிக்காவிலுள்ள கொலைகாரர்களுக்கு அடித்த சாவுமணிதான் அது.
ReplyDelete