Header Ads



வட மாகாணசபை தேர்தல் - முஸ்லிம் காங்கிரஸ் இன்று ஆராயும்


வடக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய செயற்குழு கூடி ஆராயவுள்ளது. இந்த கூட்டம் இன்று 27-04-2013 இடம்பெறவுள்ளது.
  
முஸ்லிம் மக்கள் முழுமையாக மீள்குடியோற்றியதன் பின்னரே அங்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். sfm

4 comments:

  1. நீங்க கூடினால்தான் என்ன! கூடாவிட்டல்தான் என்ன உங்களால் முஸ்லிம் சமூகம் ஒருகாலமும் விமோசனம் அடையப்போவது இல்லை, உங்களைப்போன்ற கயவர்களுக்கு பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் பெயரைக்கூரும் அருகதையே கிடையாது தயவு செய்து அந்த நல்லவரை கபுரில் ஆவது நிம்மதியாய் இருக்கவிடுங்கள்

    ReplyDelete
  2. முஸ்லிம் மக்களுக்கு ஒன்றும் செய்யாத முஸ்லிம் காங்கிரஸ் ஏன் முஸ்லிம் மக்கள் குடியேற்றத்தின் பின்னர் தேர்தல் நடைபெறவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கின்றது முஸ்லிம்களின் வாக்கை பெற்வேண்டுமென்பதுதானே வெளிப்படையான நோக்கம். இன்ஸா அல்லாஹ் அதற்குரிய எதுவித தகுதியும் முஸ்லிம்காங்கிரஸ் இற்கு இல்லையென்பது இலங்கைவாழ் முஸ்லிம்களின் தற்போதைய நிலைப்பாடு. மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் இருக்கும்போதே முஸ்லிம்களுக்கு ஒரு ஆணித்தரமான் தலைமைத்துவம் இருந்தது அதை உடைக்கவேண்டுமென்பதுதான் பலரினது குறிக்கோளாக இருந்தது அது அப்போது நடக்கவில்லை இலங்கையில் ஆட்சியை தீர்மானிக்கும் ஒரு பாரிய சக்தியாகவே இருந்த முஸ்லிம்காங்கிரஸ் அதன் தலைவருடனேயே மரணித்துவிட்டது அவரின் மரணத்தின் பின்னர்தான் முஸ்லிம்களிடையே பிரவுகளை உண்டாக்கி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையைசீர்குலைத்தால்தான் தாம் நினைத்ததைச்சாதிக்கமுடியுமென்ற சில குள்ள நரிகளின் வலையில் சிக்கி சின்னாபின்னமாய் சிதறிய சிறு சிறு துகள்களே ஏனைய கட்சிகளின் தோற்றப்பாடு. புரிந்துணர்வும் ஒற்றுமையும் தீயவர்களின் செயல்பாட்டின் உள்னோக்கம் புரியாததன் விளைவுதான் அனைத்து சமூகங்களிடையேயும் இவ்வளவு பிழவுகள் ஏற்படக்காரணமாகவுள்ளது.. இது மட்டுமல்ல வேறுகாரணங்களும் உள்ளன.

    ReplyDelete
  3. Are you going to extent your cheating activates toward Northern Muslim Community too. Good, I thought why SLMC members suddenly started to talk about Muslims after long terms silent.

    ReplyDelete
  4. வட மாகாண தேர்தல் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடையாது. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்த 23 ஆண்டுகளுக்குள் அம் மக்களுக்காக முஸ்லிம் காங்கிரஸ் செய்த சேவைகள் என்னவென்று பார்த்தால் மிஞ்சுவது பூச்சியமே! ஆனால், அந்த மக்களுக்கு, வட மாகாணத்திலிருந்து தானும் ஒரு அகதியாக வெளியேறிய ரிஷாத், பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து ஆற்றிய பணிகள் அநேகம். அந்த மக்களிடம் வாக்குக் கேட்கும் உரிமை அவருக்குத்தான் உள்ளது. எனவே, இந்த வட மாகாண சபைத் தேர்தலிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டு, அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட வேண்டும். அந்த மக்களுக்கு எது நல்லது, எது தீயது என்பதை அவர் சரியாகத் தீர்மானித்துச் செயற்படுவார். வட மாகாண முஸ்லிம்களும் அவரது தலைமைத்துவதையே விரும்பி நிற்கின்றனர்..

    ReplyDelete

Powered by Blogger.