Header Ads



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 'நீல அலை' திட்டத்தின் புதிய அங்கத்தவர்கள் (படம்)



(அனா)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 'நீல அலை' திட்டத்தின் கீழ் புதிதாக அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் வேலைத்திட்டம் தற்போது நாட்டில்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை புனரமைக்கும் பொருட்டு வடக்கு கிழக்கு மாகாணம் உற்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் 'நீல அலை' அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு இணங்க இவ் வேலைத்திட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.

இத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை, காகிதநகர் போன்ற பகுதிகளில் இவ் வேலைத்திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காவத்தமுனை பிரதேச அமைப்பாளர் எஸ்.ஏ.எம்.கலீம் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட மகளீர்களுக்கான கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

காவத்தமுனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கல்குடாத் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் கலந்து கொண்டு கட்சியில் இணைந்து கொண்ட மகளீருக்கான அங்கத்துவ அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து இக் கிராமங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை பரப்பு நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றன.






6 comments:

  1. புதிய வியாபார்கள் மக்களை விற்று கொந்தராத்து வாங்கபோகின்றார்கள்,

    ReplyDelete
  2. thurnthu pona katsiallam meendum mulaikinradu muslimkalai vitpatharku malum oru kuotam purappatu vitadu walka, alladu aliunthu ponkal

    ReplyDelete
  3. very good pre planned business with very old poor people.

    ReplyDelete
  4. thirunthamaad deengala Ya Allah nalla brain aik kodu

    ReplyDelete
  5. ya Allah nalla arivaik kodu intha manitharhaluku,panam sambathika nalla valihalai parungal

    ReplyDelete
  6. entha kallar koottam erukkum warai ealai makkal ninmatheyaha wala muteyathu! karanam etil erekkum rafeel anpawan ponpella kallan ewanai pola poi watanteyaik kurek contu elaihal etam panam venty waeru walakka ventam

    ReplyDelete

Powered by Blogger.