Header Ads



இஸ்லாமிய பள்ளிக்கூடத்தில் தீ - 13 சிறுவர்கள் வபாத்



பர்மிய நகரான ரங்கூனில் இஸ்லாமிய பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் 13 சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த தீ பற்றிக்கொண்ட போது அந்த பள்ளிக்கூடத்தின் தங்கும் விடுதியில் 70 க்கும் அதிகமானோர் நித்திரையில் இருந்திருக்கிறார்கள்.

அந்த தங்கும் அறையின் கதவுகள் தாழிடப்பட்டிருந்ததால், அந்தச் சிறுவர்கள் அதில் அகப்பட்டுக் கொண்டதுடன், மூச்சுத் திணறிப் போனார்கள்.

முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான அண்மைய மதவன்செயல்கள் இதற்கு காரணம் அல்ல என்றும் பதிலாக மின் கசிவுதான் இந்த தீச் சம்பவத்துக்கு காரணம் என்றும் பொலிஸார் கூறுகிறார்கள்.

அங்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்க வந்தவர்கள் ஆத்திரத்துடன் காணப்பட்டதால், கலவரமடக்கும் பொலிஸார் அங்கு அனுப்பப்பட்டனர். bbc


No comments

Powered by Blogger.