Header Ads



சிங்கள மக்களின் நல்லெண்ணத்தை வென்றால் மட்டுமே நாட்டில் நிம்மதியாக வாழமுடியும்



(இக்பால் அலி)

நூராணியா ஹஸனுடைய மரணம் 30 வருட கால யுத்த நிலையிலிருந்தது மீட்டெடுக்கப்பட்ட நாட்டில் வாழும் தெற்கு சிங்களையும் மக்களையும் வடக்கு தமிழ் மக்களையும்  வானொலி ஊடாக   ஒன்றிணைக்கும் பணியைச் செய்வதற்காக செல்லும் போதுதான் அவர் உயிர் இழந்தார். யுத்ததிற்குப் பின் நம்பிக்கை இழந்து தவிக்கின்ற தமிழ் சமூகத்தின் மத்தியில் மீண்டும் நம்பிக்கை கட்டி எழுப்புவதற்காக முயற்சிகள் மேற்கொண்ட போதே அரவது  கடைசிக் கால கட்டம் அமைந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல்வேறு உயர் பதவிகள் வகித்து மறைந்த நூராணியா ஹஸன் பற்றி ஒரு வானொலியின் இதயக்குரல் ஓய்ந்தது என்றும் நூராணிய ஹஸன் நினைவு மலர் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

நூராணியா ஹஸனை எடுத்துக் கொண்டால் அவர் லேக் ஹவுஸில் ஒப்பு நோக்குனராக சேவையாற்றிய காலகட்டத்தில் தினகரன் பிரதம ஆசிரியராக கே. சிவகுருநாதன் கடமையாற்றினார். அப்போது தேசிய நிகழ்வுகள் , சமகால அரசியல் நிலவரம் குறித்து பத்திரிகைக்கு கட்டுரை எழுதுவற்கு ஆட்களைத் தேடினால் அதனை திறன்பட உடனடியாக செய்து முடிப்பவர் நூராணியா ஹஸனே விளங்கினார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு சாதாரண  நிலையிலிருந்து கொண்டு ஒரு சிறுபான்மையினர் அடையக் கூடிய  ஒரு முஸ்லிம் அடையக் கூடிய மிக உயர் தரப் பதவிகளை தம்முடைய 50 வயதிலே அடையக் கிடைத்தமை என்பது அது எமக்கு ஒரு படிப்பினை. எங்களுக்கிடையே ஒரு மனக்குறை உண்டு. நாங்கள் சிறுபான்மையினர் உயர்ந்த இடத்திற்கு வரமுடியாது என்று. ஆனால் அவர் எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து விட்டு தமிழ் மக்களின் அபிலாஷகளை கொண்ட தென்றல் வானொலியின் பணிப்பாளராக சேவையாற்றினார் என்றால் அது நூராணியா ஹஸனாகத் தான் இருக்கும். வர்த்த சேவை, வியாபார சேவை விளையாட்டுத்துறை போன்றவைகளில் பணிப்பாளராக இருந்துள்ளார். ஒரு காலகட்டத்தில் கண்டி புகையிர நிலையத்தில் புகையிர நிலையத்தின் முக்கிய பொறுப்பதிகாரியாக ஒரு முஸ்லிம் ஒருவரை நியமனம் செய்ய முடியாது. அந்த இடத்தில்  புகையிர பிரதான முகாமையாளராக ஒரு முஸ்லிம் ஒருவரை நியமனம் செய்தற்கு பெரும்பான்மையினத்தவர்கள் இடமளிக்க வில்லை. கண்டி என்பது ஒரு புனித நகரம், அதில் உயர் பதவி வகிப்பவர்கள் ஒரு பௌத்தனாக இருக்க வேண்டும் என்ற சித்தாந்தங்கள் பேசுகின்ற இடமான கண்டி செங்கடகல வானொலிச் சேவையில் பணிப்பாளராக நியமனம் பெற்றார். அங்கு குறுகிய காலத்தில் கண்டி பெரிய பௌத்த தேரர்களின் மற்றும் அங்குள்ள சிங்கள மக்களின் மனதை வென்று செயற்பட்டார்.

தம் நிறுவனத்தின் பிரச்சினைகளை இனம் கண்டு கட்டி எழுப்புவதில் அவர் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார். இலங்கை வானொலிக் கூட்டுத் தாபனம் ஏனைய வானொலிகளுடன் போட்டி போட மிகச் சிரமப்பட்டது. இவர்கள் ஒரு காலகட்டத்தில் சம்பளம் கொடுக்கக் கூட மிக கஷ்டமான நிலையில் இருந்தார்கள். அந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தும் பிரிவின் பணிப்பாளராக இருந்து பல வழிகளிலும் வருமானத்தை ஈட்டக் கூடிய நவீன  வசதிகளை ஏற்படுத்தி பெருந்தொகையான பணம் வருவதற்கு வழிவகுத்தார்.

நாங்கள் எங்களுடைய திறமையைப் பயன்படுத்தினால் எங்களுக்குரிய இடங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதனை இளம் தலைமுறையினர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவரைப் போன்று ஊடகத்துறையில் பெரிய ஜாம்பவான் எங்களுக்குத் தேவைப்படுகின்றார்கள்.

முஸ்லிம் சமூகம் தனித்து பயணிக்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. இதில் நியாயங்கள் இருக்கின்றன.  அண்மைக் காலப் பிரச்சினைகளில் மாவனல்லை அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை. மாவனல்லை மக்கள் ஒரு இனக் கலவரத்தைக் கண்டு அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழுகின்ற ஒரு சூழலைக் காண்கின்றோம். ஏனைய பிரதேசங்களில் காணப்படும் குழப்ப நிலைகள் மானல்லையில் மிகக் குறைவாக இருக்கின்றன. சிங்கள பெரும்பான்மையின மக்களின் நல்லெண்ணத்தை வென்றால் மட்டும் தான் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


1 comment:

  1. சிங்கள மக்களின் நல்லெண்ணத்தை எடுக்க வேண்டும் தான். அந்த நல்லெண்ணத்தை பெறுவதற்கு முன் நாம் அல்லாஹ்வின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும். அதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதை செய்தால் இயல்பாகவே சிங்கள மக்களிடத்தில் நல்லெண்ணம் வந்துவிடும்.
    "இவர்கள் என்னை சார்ந்தவர்கள் அல்ல" என்று ஒரு 'லிஸ்டை' அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். அந்த 'லிஸ்டில்' "தாடி வைக்காதவன் " என்பது வருகிறது. அல்லாஹ்வின் தூதரை சாராவிட்டால் அல்லாஹ்வை சார முடியாது. அல்லாஹ்வை சாரா விட்டால் அல்லாஹ்வின் நல்லெண்ணத்தைப் பெற முடியாது. சிங்கள மக்களின் நல்லெண்ணத்தைப் பற்றி கூறும் நீங்கள் இஸ்லாத்தின் கட்டாய சுன்னத்தான "தாடியை விட்டுவிடுதல் - மீசையை கத்தரித்தல்" என்ற சட்டத்துக்கு நேர் முரணாய் தாடியை மளித்து, மீசையை வைத்துள்ளீர்கள். நீங்கள் முஸ்லிம் மீடியா!! நாமும், அவரும் முதலில் அல்லாஹ்வின் நல்லெண்ணத்தை பெற முயற்சிப்போம். காலச் சக்கரம் அல்லாஹ்வின் கையில். நம்பிக்கயாளனுக்கு சொல்கிறேன், நாம் முஃமீனாக நடக்கும் பட்சத்தில் அல்லாஹ் நாடினால் நாம் கேட்காமலே நல்லெண்ணம் வரும். ஏனென்றால் அப்படிப்பட்ட முஃமினை உலகில் எந்த மனிதாபிமானமுள்ள உள்ளமும் நேசிக்கும்.
    குறிப்பு: அல்லாஹ்வுக்குப் பயப்படுதல் என்பதை முதலில் எனக்கும் அப்பால் jaffna muslim உட்பட அனைவருக்கும் கடமையான ஒன்றாய் ஞாபகப் படுத்த விரும்புகிறேன். இது சகோதரர் அமீனை இலக்காக வைத்த விமர்சனம் அல்ல நம்மில் உள்ள ரசூலுல்லாஹ்வின் சுன்னத்தை அதுவும் கட்டாய சுன்னத்தை புறக்கணிக்கும் அனைவருக்குமாய் சொல்கிறேன். தேவைப்பட்டால் கேளுங்கள் ஹதீஸ் இலக்கத்தையும் தருகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.