இன ஐக்கியத்தையும், மத நல்லுறவையும் கட்டியெழுப்பியுள்ளோம் - மஹிந்த பெருமிதம்
நாம் நாட்டுக்காக எதைச் செய்தபோதும் குற்றச்சாட்டுக்களும் விமர் சனங்களுமே எஞ்சியுள்ளன என தெரிவித்த ஜனாதிபதி மனித உரிமையை மதிப்பதில் நாம் அன்றும் இன்றும் முன்னணியிலுள்ளவர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
பாதெனிய, அநுராதபுரம் நெடுஞ்சாலையை நேற்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து அதனையொட்டிய மக்கள் பேரணிக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,
அவர்கள் கூறுவது போல் பெருந்தொகையாக மரணமடையவில்லை. பெருமளவிலானோர் மரணமடைந்து விட்டனர் என்று சொல்லப்பட்டாலும் அவர்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். நாம் மனித உரிமை தொடர்பில் மிக வும் உயர் மட்டத்தில் கவனம் செலுத்து பவர்கள், மனித உரிமை மற்றும் மக்க ளின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக நாம் அன்று தொட்டு இன்று வரை முக்கியமளிப்பவர்கள். இப்போதும் அதனை மதிப்பவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து வருபவர் நாம்.
முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து இனங்களுக்கிடையில் அன்னியோன்யத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். சகல இது மதங்களுக்கிடையிலும் நல்லுறவைக் கட்டியெழுப்பியுள்ளோம்.
இது தொடர்பில் அன்று போல் இன்றும் மக்களின் பேராதரவு எமக்கு அவசியமாகிறது. உங்கள் ஆதரவு எமக்குப் பலத்தையும் துணிவையும் வழங்குவது உறுதி. உங்கள் ஆதரவும் தைரியமும்தான் நாடும் நாமும் முன்னேற உறுதுணை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


Post a Comment