Header Ads



'எம் சமூகத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு முஸ்லிமும் முன்வருதல் அவசியம்'



(இ. அம்மார்)

நாங்கள் அடிபடுவோம் அடிபடுவோம் என்று ஒரு பீதி நிலையில் இருந்தோம். ஆனால் இன்று எமக்கு அடித்து விட்டார்கள். எம் மீது கை வைத்து விட்டார்கள் எனினும்  எம்முடைய முஸ்லிம்கள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இன்னும் இருந்து கொண்டு இருக்கின்றார்கள். இது  எமக்கு பெரும் கவலை தரும் விடயமாகும் என்று குருநாகல் மாவட்ட ஸ்ரீ . சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

நிக்கவெரட்டிய நகரிலுள்ள ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நிக்கவெரடிய பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து ஜும் ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கிடையிலான சந்திப்பு தற்போதைய சூழ்நிலை தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் 31-03-2013 நடைபெற்றது.

பொரலஸ்கமுவவில் பெஷன் பக் தாக்கப்பட்டதை அடுத்து அதனுடைய வாகனம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியிலுள்ள வீடோன்று தாக்கப்பட்டுள்ளதாக தற்போது இங்கு வரும்வேளையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. எனினும் இந்நாட்லுள்ள பெரும்பான்மையின மக்கள் மீதும்  ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கத்தின் மீது இன்று வரை பொறுமையுடன் நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றோம். இந்தப் பிரச்சினைகளுக்கு பொங்கி எழுவதினாலோ அல்லது வேறு குறுக்கு வழிகளில் அணுகுவதன் மூலமே தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது. அனாதால் வரும் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம். இன்று உலகத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். விசேட குருநாகல் மாவட்டத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் படுத்தும் ஒரு பிரதிநிதி என்ற வகையில் பாரிய பொறுப்பு எனக்கு உள்ளது. 

தற்போது இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் நம் பகுதியிலுள்ள பன்னலயில் பொது பல சேனாவின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு பேசப்படுவது முஸ்லிம் சமூகத்தின் மீது புண்படுத்தும் விடயங்களாக இருக்கும். கண்டியில் நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு உணவு பரிமாறும் போது  அதில் நாம் எச்சிலை துப்பி விட்டு வழங்குவதாகவும் அது குர் ஆன் மற்றும் சரிஆ சட்டங்களில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.  நான் அதற்கு எதிராக சட்ட நடடிக்கை எடுப்பதற்குகான சட்ட ஆலோசனைகளைப் திரட்டிக் கொண்டிருக்கின்றேன். இது வெற்றியளிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் அரசாங்கத்தில் இருப்பவர்கள் என்று வாய் மூடிக் கொண்டு நடக்கும் விடயங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசாங்கத்திற்கு முன் நாம் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும். எங்களுக்கென்றதொரு மறுமை வாழ்க்கை  உண்டு. எனவே இந்த ஆட்சியாளர்களுக்கு பதில் சொல்ல முன் இறைவனுக்கு முதல் பதில் சொல்ல வேண்டும். 

இந்தச் சந்தர்ப்பத்தில் வீணான தர்க்கங்களில் ஈடுபட்டுக் கொண்டு கருத்து கொள்கை இயக்க வேறுபாடுகளை மறந்து நாங்கள் எல்லோரும் கலிமா சொன்ன முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் ஒன்று சேர வேண்டிய ஒரு இக்கெட்டான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முஸ்லம் சிந்தித்து ஒன்று பட வேண்டிய ஒரு காலகட்டம் இது. ஒவ்வொரு முஸ்லிமும் எம் சமூகத்தைப் பாதுகாப்புதற்கு முன்வருதல் அவசியமாகும். இஸ்லாத்தின் ஆரம்ப கட்டம் இதனை விட ஒரு சோதனையான காலம். இன்று உலக முழுதும் இஸ்லாம் வியாப்பித்துள்ளது. ஆதனால் நாங்கள் அஞ்சி வாழ்ந்த சமூகமல்ல. அஞ்ச கூடிய சமூகமுமல்ல. எனவே எம் சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஒன்று பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் புத்தளம் ஜும் ஆப்பள்ளிசால் முன்னால் செயலாளர் அஜ்மல் உள்ளிட்ட  விசேட வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Let's unite all our people islandwide under the actual Islamic leadership of ACJU as the present problem is against Islam. Let's make them strong. Unity starts at the prayer lines in the mosques!

    ReplyDelete
  3. We ready to accept ACJU as our Leaders, but they are not ready...!

    ReplyDelete

Powered by Blogger.