பொதுபல சேனாவிற்கு நோர்வே நிதி வழங்கியதா..?
பொது பல சேனா என்ற அமைப்புக்கு தமது நாடு நிதி மற்றும் எந்தவொரு உதவியினையும் ஒரு போதும் செய்யவில்லை என நோர்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நோர்வே அரசின் செய்தியை இலங்கைக்கான நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ளது.
அதில் இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் இன மத பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவோ நோர்வே எந்தவொரு பங்களிப்பினையும் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தடன் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் தன்னிடம் கிடையாது எனவும் நோர்வே சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் பொது பல சேனாவின் உறுப்பினர்களுக்கு தமது நாடு சில வருடங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்தமையையும் அவர்கள் அங்கு வந்தமையையும் குறித்த தூதரகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பிக்குகள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவானது பேச்சுவாரத்தைக்காகவே அழைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு நோர்வே எவ்வகையிலும் நிதி உதவி வழங்கவில்லை எனவும் தூதரகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. vi

Now secrete all coming out
ReplyDeleteCan you tell us what kind of negotiations took place there?
ReplyDelete