வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசுக்கு பீதி ஏற்பட்டுள்ளது - முஜிபுர் ரஹ்மான்
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது. எனவே தான் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமெனவும் அரசிலுள்ள அமைச்சர்கள் தேர்தலை நடத்த வேண்டாமெனவும் கூறுகின்றனரென ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடுத்துவதற்கு அஞ்சுகின்றது. ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்று கூறுகின்றார். இந்நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென கூறுகின்றனர்.
அரசுக்குத் தெரியும் தான்னால் வடக்குத் தேர்தலில் வெற்றிபெற முடியாதென்று. அதனால் தான் இவ்வாறான நாடகங்கள் அரசாங்கத்தினுள் இடம்பெறுகின்றன. இதற்கு காரணம் அரசாங்கம் தான்.
வடக்கில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. சிவில் நிர்வாகம் என்பது கிடையாது. எனவே வட மாகாண சபைத் தேர்தலை குழப்புவதில் அமைச்சர்களே மும்முரமாகவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். vi

UNP will face it bravely as it is so sure to capture the power in NPC.isn't it Mr.Mujibur Rahman?
ReplyDelete